யார் இந்த தேவயானி? ஏன் இத்தனை கலவரம்?

Vinkmag ad

 

                              (மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத்தூதராக இருந்தவர் தான் தேவயானி கோபர்கடே.
விசா மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டு அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவரது கைது சம்பவம் தான் தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
இந்திய நாட்டின் துணைத்தூதர் ஒருவர் அவமதிக்கப்பட்டது ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஏற்பட்டுள்ள அவமானம் எனக்கருதிய மத்திய காங்கிரஸ் அரசு,உடனடியாக அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தேசத்தின் இத்தகைய எதிர்ப்பை அமெரிக்காவே எதிர்பார்த்திருக்காது என்றே கருதலாம்.
இந்தியர்களை அவமதிப்பதென்பது அமெரிக்காவிற்கு புதியதல்ல,
அவ்வப்போது இந்தியாவின் அரசியல் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமெரிக்காவின் அணுகுமுறையும் மாறும்  என்பது தான் எதார்த்தம்.
அமெரிக்காவிற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை கண்டு மெய்சிலிர்த்த அப்பாவி மக்கள் தான் அதிகம்.
இந்தியர்களுக்கெதிரான அமெரிக்காவின் கடந்த கால அவமரியாதைகளை நினைவு படுத்தி பார்த்தால் இன்னுமா நாம் அமெரிக்காவுடனான ராஜ்ஜிய உறவு வைத்திருக்கிறோம்?
என்ற கேள்வி எழுவதுமட்டுமல்ல,இனிமேலும் அமெரிக்காவுடன் உறவு கூடாது என்றே மானமுள்ள இந்தியன் உரக்க சொல்வான்.
2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய கீர்த்திகா பிஸ்வாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் ஹர்தீப் புரியின் டர்பனை கழற்றச் சொல்லி அவரை தடுத்தும் வைத்து அவமதித்தனர் அமெரிக்கர்கள்.
இந்திய தூதர் மீரா சங்கரும் கூட அமெரிக்க விமான நிலையத்தில் தோளில் தட்டி உட்கார வைக்கப்பட்டார்.
இதேபோல் நடிகர் ஷாருக்கானும் அமெரிக்காவின் அதிதீவிர விசாரணை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.
 
அமெரிக்காவினரால் அவமதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் வெறுமனே நடிகர்கள்,தூதரக அதிகாரிகள் மட்டுமல்ல,நமது நாட்டின் மத்திய அமைச்சர் பெருமக்களும் தான் இருக்கிறார்கள்.
 
2010ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சர் பிரபுல் படேலும் இத்தகைய அவமானகரமான சோதனைக்குள்ளானவரே.
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸையும் அக்குவேறாக ஆணிவேறாக சோதனை நடத்தி அவமானப்படுத்தியது அமெரிக்கா.
ஒரு நாட்டின் அமைச்சர் என்ற மரியாதையை கடுகளவும் எதிர்பார்க்காதவர்கள் மட்டுமே அமெரிக்க செல்ல முடியும் என்ற எழுதப்படாத சட்டத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் நமது தேசத்தின் அமைச்சர் பெருமக்கள்.
இதை விட மன்னிக்கவே முடியாத ஒரு பெரும் கொடுமை நமது நாட்டின் குடியரசு தலைவராக இருந்த அமைதியின் இலக்கணம் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்கள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றபோது,
 அமெரிக்க விமான நிலையத்தில் ஷூவை கழற்றச் சொல்லி சோதனையிட்டு நமது நாட்டின் ஜனாதிபதியையே அமெரிக்கா அவமானப்படுத்தியது,
யாரிடமும் அதிர்ந்து பேசாத,எல்லோரிடமும் இணக்கமாக பேசும் அமைதியின் மறு உருவம் நமது மாசற்ற ஜனாதிபதி அப்துல்கலாமையே அவமதித்த அமெரிக்காவின் அடாவடி நாய்களுக்கெதிராக அப்போதைய ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கை என்ன?
முதுகெலும்புள்ள அரசாக இருந்திருக்குமானால் அப்போதே அமெரிக்காவுடனான ராஜ்ஜிய உறவை துண்டித்திருக்க வேண்டும்.
தற்போது ஒரு துணைத்தூதருக்கு ஏற்பட்ட அவமானத்திற்கெதிராக காட்டியுள்ள எதிர்ப்பின் கால்வாசி பங்கையாவது நமது நாட்டின் முதல் குடிமகனாக இருந்த அப்துல்கலாம் அவர்கள் அவமதிக்கப்பட்ட போது காட்டியிருந்தால் ஆணவ வெறிபிடித்த அமெரிக்க ஓநாய்களின் கொட்டம் அடங்கியிருக்கும்.
தற்போதைய துணைத்தூதர் தேவயானியை விசாமோசடி செய்த வழக்கில் தான் அவமானப்படுத்தினோம் எனக்கூறும் அமெரிக்க நாய்களிடம் நாம் கேட்பது இதுதான்,
மத்திய ராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும்,மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேல் அவர்களும்,நாட்டின் உயரிய பதவிக்கு சொந்தக்காரரான அப்துல் கலாம் அவர்களும் உனது நாட்டிற்கு வந்த போது அவமரியாதை செய்யப்பட்டதற்கு என்ன காரணம்?
இவர்கள் மீது என்ன தவறு இருந்தது?எதற்காக இவர்கள் அவமதிக்கப்பட்டார்கள்?
தற்போதைய மத்திய ஆட்சியாளர்களே,நாம் சுட்டிக்காட்டியுள்ள தலைவர்களை விடவா இந்த தேவயானி முக்கியத்துவம் பெற்றுள்ளார்?
இந்தியர்களுக்கெதிரான அமெரிக்காவின் கடந்த கால அவமரியாதைகளை நினைவு படுத்தி பார்த்தால் இன்னுமா நாம் அமெரிக்காவுடனான ராஜ்ஜிய உறவு வைத்திருக்கிறோம்?
என்ற கேள்வி எழுவதுமட்டுமல்ல,இனிமேலும் அமெரிக்காவுடன் உறவு கூடாது என்றே மானமுள்ள இந்தியன் உரக்க சொல்வான்.

News

Read Previous

டிசம்பர் – 18 உலக அரபி மொழி தினம்

Read Next

குழந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *