மூதாதையர் சேர்த்து வைத்த அனுபவ அறிவு

Vinkmag ad

மூதாதையர் சேர்த்து வைத்த அனுபவ அறிவு                                                          பேரா. கே. ராஜு

மொழியைக் கற்றுக் கொள்வதிலும் பிற திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் மனிதர்கள் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடு கின்றனர். ஒரு நாய்க்கோ, டால்ஃபினுக்கோ, குரங்கிற்கோ, யானைக்கோ சில பயிற்சிகளைக் கற்றுத் தரலாம். ஆனால் அவற்றின் கற்கும் திறன் ஒரு எல்லைக்குட்பட்டதுதான். அதன் காரணமாக, அவற்றின் வாழ்க்கை முறையில் பல ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் இன்றைய மனிதர்களின் வாழ்க்கை முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் மூதாதையரது வாழ்க்கை மாதிரியாக இருக்கிறது? சில நூறு ஆண்டுகளுக்கு முன் கூட இன்றைய வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையல்லவா நம் முன்னோர்களுக்குக் கிடைத்தது? இதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

மனித மூளைதான் காரணம். பிற விலங்கினங்களின் மூளை அமைப்பிற்கும் மனித மூளை அமைப்பிற்குமி டையே பெரும் வேறுபாடுகள் உள்ளன. முக்கியமான வேறுபாடு மனித மூளையின் அளவு. 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆர்டிபித்திக ராமிட எனும் நம் மூதாதையரின் மூளை 400 க.செ.மீ. அளவே இருந்தது ; 16 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு 800 க.செ.மீ-லிருந்து 900 க.செ.மீ. அளவிற்கு மூளை இருந்தது ; இந்த இனம் பின்னர் ஹோமோ சேப்பியன்ஸ் நியாண்டர்தாலன்ச என்றும் அதற்குப் பின்னர் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் (தற்போதைய மனிதர்கள்) என்றும் பரிணாம வளர்ச்சி அடைந்தது. தற்போதைய மனிதர்களின் மூனை அளவு 1400 க.செ.மீ.

ஆப்பிரிக்காவில் தோன்றிய வாலில்லாக் குரங்கு இனமே மனிதர்களின் மூதாதையராகக் கருதப்படுகிறது. மனித இனத்திற்கு மிக நெருக்கமான இனங்களாக சிம்பான்ஸி, கொரில்லா குரங்கின வகைகளைக் கொள்ளலாம். மனிதன் உருவான பிறகு மாறி வந்த சில நிலைகளையும் அந்த மாற்றங்கள் நடைபெற்ற காலகட்டங்களையும்  அட்டவணை விளக்குகிறது.

இனம்                                                                     காலகட்டம்

ஆர்டிபித்திகஸ் ராமிடஸ் …….50 லட்சம் – 40 லட்சம் ஆண்டுகள் முன்னதாக

ஆட்ராலோபித்திகஸ் ஆப்பிரிகனஸ் …..30 லட்சம் – 20 லட்சம் ஆண்டுகள் முன்னதாக

ஹோமோ எரக்டஸ் ………………………………….. 20 லட்சம் – 4 லட்சம் ஆண்டுகள்  முன்னதாக

ஹோமோ சேப்பியன்ஸ் நியாண்டர்தாலன்சிஸ் ….. 200 ஆயிரம் – 30 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாக

ஹோமோசேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்,,,,, 200 ஆயிரம் ஆண்டுகளிலிருந்து இன்று வரை

சிம்பன்ஸி, கொரில்லா போன்ற வாலில்லாக் குரங்குகளின் மூளை அளவோடு ஒப்பிட்டால் மனிதர்களின் மூளை மூன்று மடங்கு பெரியது. இயற்கை மனிதனுக்குப் பல சோதனைகளை வைத்து மூளை எனும் சக்தி வாய்ந்த கருவியை மெல்ல மெல்லப் பயன் படுத்தக் கற்றுக் கொடுத்திருக்கிறது. சிரமமான சோதனைகளை வெல்வதற்கும் சுற்றுச் சூழல் ஆபத்துக்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டு வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டு முன்னேறுவதற்கும் மூளை வளர்ச்சி அவனுக்குக் கைகொடுத்திருக் கிறது. மனிதன் தன் மூளையைப் பயன்படுத்தி மொழி, கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றை உருவாக்கினான். இதற்கு அவன் பல்லாயிரம் ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. வெற்றி உடனே கிடைத்துவிடவில்லை. படிப்படியாகத்தான் கிடைத்தது. இன்றைய வளர்ச்சிக்கு மூலதனமே நம் மூதாதையர் சேர்த்து வைத்த அனுபவ அறிவு அனைத்தும்தான். அவர்கள் அனைவர் தோள்மீதும் ஏறி நின்று உலகினைப் பார்க்கும் வாய்ப்பு இன்றைய தலைமுறைக்குக் கிடைத்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நமது அனுபவ அறிவும் சேர்த்துக் கிடைக்கும்.

News

Read Previous

அபிநந்தனுக்கு வாழ்த்துக்கள்

Read Next

எனக்குப் பிடித்த திருக்குறள்!

Leave a Reply

Your email address will not be published.