மயங்கொலிச் சொற்கள்

Vinkmag ad

“மயங்கொலிச் சொற்கள்”
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
ண, ன பொருள் வேறுபாடு.
அணல் – தாடி, கழுத்து
அனல் – நெருப்பு
அணி – அழகு
அனி – நெற்பொறி
அணு – நுண்மை
அனு – தாடை, அற்பம்
அணுக்கம் – அண்டை, அண்மை.
அனுக்கம் – வருத்தம், அச்சம்
அணை – படுக்கை, அணைத்துக் கொள்ளுதல்
அனை – அன்னை, மீன்
அணைய – சேர, அடைய
அனைய – அத்தகைய
அண்மை – அருகில்
அன்மை – தீமை, அல்ல
அங்கண் – அவ்விடம்
அங்கன் – மகன்
அண்ணம் – மேல்வாய்
அன்னம் – சோறு, அன்னப்பறவை
அண்ணன் – தமையன்
அன்னன் – அத்தகையவன்
அவண் – அவ்வாறு
அவன் – சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
ஆணகம் – சுரை
ஆனகம் – துந்துபி
ஆணம் – பற்றுக்கோடு
ஆனம் – தெப்பம், கள்
ஆணி – எழுத்தாணி, இரும்பாணி
ஆனி – தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு -ஆண்மகன்
ஆனேறு – காளை, எருது
ஆண் – ஆடவன்
ஆன் – பசு
ஆணை – கட்டளை, ஆட்சி
ஆனை – யானை
இணை – துணை, இரட்டை
இனை – இன்ன, வருத்தம்
இணைத்து – சேர்த்து
இனைத்து – இத்தன்மையது
இவண் – இவ்வாறு
இவன் – ஆடவன், (அண்மைச் சுட்டு)
ஈணவள் – ஈன்றவள்
ஈனவள் – இழிந்தவள்
உண் – உண்பாயாக
உன் – உன்னுடைய
உண்ணல் – உண்ணுதல்
உன்னல் – நினைத்தல்
உண்ணி – உண்பவன், ஒருவகைப் பூச்சி
உன்னி – நினைத்து, குதிரை
ஊண் – உணவு
ஊன் – மாமிசம்
எண்ண – நினைக்க
என்ன – போல, வினாச்சொல்
எண்ணல் – எண்ணுதல்
என்னல் – என்று சொல்லுதல்
எண்கு – கரடி
என்கு – என்று சொல்லுதல்
ஏண் – வலிமை
ஏன் – வலிமை, ஒரு வினைச்சொல்
ஏணை – தொட்டில்
ஏனை – மற்றது
ஐவணம் – ஐந்து வண்ணம்
ஐவனம் – மலை நெல்
ஓணம் – ஒரு பண்டிகை
ஓனம் – எழுத்துச்சாரியை
கணகம் – ஒரு படைப்பிரிவு
கனகம் – பொன்
கணப்பு – குளிர்காயும் தீ
கனப்பு – பாரம், அழுத்தம்
கணி – கணித்தல்
கனி – பழம், சுரங்கம், சாரம்
கணம் – கூட்டம்
கனம் -பாரம்
கண்ணன் – கிருஷ்ணன்
கன்னன் – கர்ணன்
கண்ணி – மாலை, கயிறு, தாம்பு
கன்னி – குமரிப்பெண், உமை, ஒரு ராசி
கணை – அம்பு
கனை – ஒலி, கனைத்தல்
கண் – ஓர் உறுப்பு
கன் – கல், செம்பு, உறுதி
கண்று – அம்பு
கன்று – அற்பம், இளமரம், குட்டி, கைவளை
கண்ணல் – கருதல்
கன்னல் – கரும்பு, கற்கண்டு
காண் – பார்
கான் – காடு, வனம்
காணம் – பொன், கொள்
கானம் – காடு, வனம், தேர், இசை
காணல் – பார்த்தல்
கானல் – பாலை
கிணி – கைத்தாளம்
கினி – பீடை
கிண்ணம் – வட்டில், கிண்ணி
கின்னம் – கிளை, துன்பம்
குணி – வில், ஊமை
குனி – குனிதல், வளை
குணித்தல் – மதித்தல், எண்ணுதல்
குனித்தல் – வளைதல்
குணிப்பு – அளவு, ஆராய்ச்சி
குனிப்பு – வளைப்பு, ஆடல்
கேணம் – செழிப்பு, மிகுதி
கேனம் – பைத்தியம், பித்து
கேணி – கிணறு
கேனி – பித்துப் பிடித்தவர்
கோண் – கோணல், மாறுபாடு
கோன் – அரசன்
சாணம் – சாணைக்கல், சாணி
சானம் – அம்மி, பெருங்காயம்
சுணை – கூர்மை, கரணை
சுனை – நீரூற்று
சுண்ணம் – வாசனைப்பொடி
சுன்னம் – சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
சேணம் – மெத்தை
சேனம் – பருந்து
சேணை – அறிவு
சேனை – படை
சோணம் – பொன், சிவப்பு, தீ, சோணகிரி
சோனம் – மேகம்
சோணை – ஒரு நதி, சேரன் மனைவி
சோனை – மழைச்சாரல், மேகம்
தண் – குளிர்ச்சி
தன் – தன்னுடைய
தணி – தணித்தல்
தனி – தனிமை
தாணி – தான்றிமரம்
தானி – இருப்பிடம், பண்டசாலை,
தாணு – சிவன், தூண், நிலைப்பேறு
தானு – காற்று
திணை – ஒழுக்கம், குலம்
தினை – தானியம், ஒருவகைப் புன்செய்ப்பயிர்
திண்மை – உறுதி
தின்மை – தீமை
திண் – வலிமை
தின் – உண்
துணி – துணிதல், கந்தை
துனி – அச்சம், ஊடல் நீட்டித்தல்
தெண் – தெளிவு
தென் – தெற்கு, அழகு
நண்பகல் – நடுப்பகல்
நன்பகல் – நல்லபகல்
நணி – அணி (அழகு)
நனி – மிகுதி
நாண் – வெட்கம், கயிறு
நான் – தன்மைப் பெயர்
நாணம் – வெட்கம்
நானம் – புனுகு, கவரிமான்
பணி – வேலை, கட்டளையிடு
பனி – துன்பம், குளிர், சொல், நோய்
பணை – முரசு, உயரம், பரந்த
பனை – ஒருவகை மரம்
பண் – இசை
பன் – அரிவாள், பல
பண்ணை – தோட்டம்
பன்னை – கீரைச்செடி
பண்ணுதல் – செய்தல்
பன்னுதல் – நெருங்குதல்
பண்ணி – செய்து
பன்னி – சீப்பு, பனிநீர், மனை, சணல்
பண்மை – தகுதி
பன்மை – பல
பணித்தல் – கட்டளையிடுதல்
பனித்தல் – துளித்தல், தூறல், விரிந்த
பட்டணம் – நகரம்
பட்டினம் – கடற்கரை நகர்
பாணம் – அம்பு
பானம் – நீருணவு
புணை – தெப்பம்
புனை – இட்டுக்கட்டுதல், கற்பனை
புண் – காயம்
புன் – கீழான
பேணம் – பேணுதல்
பேனம் – நுரை
பேண் – போற்று, உபசரி
பேன் – ஓர் உயிரி
மணம் – வாசனை, திருமணம்
மனம் – உள்ளம், இந்துப்பு
மணை – மரப்பலகை, மணவறை
மனை – இடம், வீடு
மண் – தரை, மண்வகை
மன் – மன்னன், பெருமை
மண்ணை – இளமை, கொடி வகை
மன்னை – தொண்டை, கோபம்

News

Read Previous

மலர்ந்துவிடச் செய்து நிற்போம் !

Read Next

மாதாந்திர புனித புர்தா ஷரிஃப் மஜ்லிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *