நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவுகள்….

Vinkmag ad


வல்லரசாக விளங்கிய ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடைபெற்ற அறிவியல் போட்டியில் நிலவுக்கு மனிதனை அனுப்பி அங்கே நடக்கவைத்து வெற்றிப் பெருமிதம் கொண்டது அமெரிக்கா என்பது அனைவரும் அறிந்ததுதான். அதை ஒரு நாட்டின் பெருமையாகக் கருதாமல் மனிதகுலத்தின் மகத்தான வெற்றி என்று கருதும் மாண்பார்ந்த மனப்பாங்கு பெற்றவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பதை அவர் அப்போது கூறிய 
“That’s one small step for a man, one giant leap for mankind,” என்ற கருத்திலிருந்து அறியலாம்.

நிலவிலிருந்து நிலவுலகு திரும்பிய அவரும் அவருடைய குழுவினரும் அவர்கள் பயணம் திரும்பி வந்த விண்கலத்தை உருக்கிச்  செய்த பேனாக்களுடன் உலக நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டு உரைகள் பல ஆற்றி உலகத் தலைவர்களுக்குப் பரிசாக அந்தப் பேனாக்களையும் அளித்து வந்தனர்.

நீல் ஆம்ஸ்ட்ராங் எகிப்தில் பயணம் செய்தபோது அவருக்கு ஓர் எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டது.அது என்னவெனில் தொழுகைக்கு அழைக்கும் அதான் எனும் இன்ப ஓசையைக் காதால் கேட்டதுதான். உலகெங்கும் ஓதப்படும் அதான் ஓசையை அவர் அப்போதுதான் கேட்டாரா என்று நம்முடைய “பகுத்தறிவு” கேட்கவே செய்யும். அவர் எகிப்தில் கேட்டது முன்னதாக அவர் நிலவில் இருந்த நேரத்தில் கேட்ட அதான் ஓசையை ஒத்திருந்த ஒன்றைத்தான்!

பின்னர் அவர் முஸ்லிமாக ஆன விவரம் எழுபதுகளில் உலகை ஒரு வதந்தியைப் போல வலம் வந்தது. சிற்சில  காரணங்களுக்காக அவர் அதை மறைத்து வைத்திருந்தார் என்பதே உண்மை. இந்த உண்மை அவர் அமெரிக்காவுக்குத் திரும்பியவுடன் அவர் முஸ்லிம் ஆனதற்காக அமெரிக்க அரசு அவரை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்தது. இந்தச்  செய்தி எனக்குத் தெரிந்தவரை மலேசிய நாட்டு “ஸ்டார்” பத்திரிகையில் மட்டுமே வெளிவந்தது. இது துங்கு அப்துர் ரஹ்மானுடைய பத்திரிகை என்று ஞாபகம்.

அந்தப் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் ஆம்ஸ்ட்ராங் படத்துடன் வெளிவந்த செய்தியின் தலைப்பு “He lost his coveted job-அவர் தம்முடைய விருப்பத்திற்குரிய வேலையை இழந்தார்”     என்பதுதான். தொடர்ந்து அமெரிக்க அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்டவராக இருந்துவந்தவர் இப்போது இறந்துபோனதால் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

எனக்கு அவர் நிலவில் அதான் ஒலி கேட்டார் என்பதில் எந்த  ஐயப்பாடும் ஆச்சரியமும் எப்போதும் ஏற்படவில்லை. பிலால் (ரலி) அவர்களின் தொழுகை அழைப்பு அல்லாஹ்வின் அரியணையான அர்ஷையும் எட்டவில்லையா?

ஆம்ஸ்ட்ராங் முஸ்லிம் ஆனது உண்மையானால் அல்லாஹ் அதற்கான எல்லா நற்கூலியையும் தரப் போதுமானவன். அமெரிக்கா அதை மறைத்திருந்தால் /கெடுத்திருந்தால் அதற்குரிய கூலியைத் தரவும் அல்லாஹ்வே போதுமானவன்.


—–ஏம்பல் தஜம்முல் முகம்மது

newlightpdkt@gmail.com

 

News

Read Previous

அமைதி !

Read Next

ஒலி வடிவில் தமிழ் நூல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *