நீங்கள் எந்த மதம் ?

Vinkmag ad

நீங்கள் எந்த மதம் ?

 

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

thahiruae@gmail.com

சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதிலும் பல அமைப்புகள் மற்றும் கட்சிகள் மதம் மற்றும் சாதி வேறுபாடு இல்லாமல் ஈடுபட்டு வருகின்றன.அவை பற்றிய புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பதிபவர்கள் ஊடகங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும்பாலோர் தங்களுக்கு பிடித்தமான கட்சிகள்,இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் மற்றும் மதங்கள் பார்த்தே லைக் செய்யவும் ஷேர் செய்யவும் செய்கின்றனர். மற்றும் வெளியிடுகின்றனர்.

காப்பாற்றிய யாரும் தங்கள் மதம் மற்றும் இனம் பார்த்து மக்களை காப்பாற்ற வில்லை.மனிதாபிமானம் கொண்டு அனைத்து மத மற்றும் பிரிவு மக்களையும் அவர்கள் காப்பாற்றினார்கள்.உறைவிடம் மற்றும் உணவு கொடுத்த போது கூட அவர்களின் மதத் தளங்களில் வைத்து கொடுத்து இருக்கலாம், ஆனால் கொடுக்கப் பட்டவர்கள் மதம் பார்த்து கொடுக்கப் பட வில்லை.மனிதம் அன்பு மற்றும் கருணை கொண்டே  அனைவருக்கும்  உதவினர்.

குறிப்பாக முஸ்லிம்களை நாட்டில் குண்டு வெடிப்புகள் நடக்கும் போதெல்லாம் தீவிரவாதிகளாக சித்தரித்த தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் தற்போது சென்னை வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றி அரவணைத்து. அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதனை இருட்டடிப்பு செய்து வருவது ஊடக தர்மத்துக்கே எதிரானதாகும்.

அடை மழை முடிந்து மக்கள் ஒருவரையொருவர் புரிந்து அன்பு மழை பொழியும் இத்தருணத்தில் நாம் பரந்த இதயத்தோடு தங்களை இந்த நிவாரண பணியில் ஈடு படுத்திய அனைவரையும் பாராட்டும் முகமாக அவர்களின் தியாகம் மற்றும் சேவை குறித்த புகைப் படங்களை ஊடகவியலாளர்கள்  மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்பவர்கள் ,லைக் செய்யவும் செய்திகளை வெளியிடவும் செய்ய வேண்டும்.இது மனித குல சேவையில் தம்மை அர்ப்பணித்து நம் சக சகோதர சகோதரிகளை காப்பாற்றிய மக்களுக்கு நாம் செலுத்தும் நன்றி மட்டும் பாராட்டாகும்..

துயர்மிகு இத்தருணத்தில் மக்களை காப்பாற்றுவதில் மதம் சாதி பார்ப்பவர்களும்,காப்பாற்றிய அமைப்பு மற்றும் மக்களை மதம் பார்த்து உள்நோக்கத்துடன் அவர்களை பாராட்ட ஊக்குவிக்க அல்லது அந்த செய்திகளை மறைப்பவர்கள்  மருத்துவ போர்வையில்  இதயம் கொண்டிருக்கலாம்.மனிதாபிமான பார்வையில் அவர்கள் இதயம் இல்லாதவர்கள்.

வெள்ளம்  மதம்  ,சாதி , இயக்கம் மற்றும் கட்சி  பார்க்காமல்  .எல்லோருடைய வீட்டிலும் புகுந்தது.அதில் பாதிக்கப் பட்ட மக்களை காப்பாற்றிய மக்களை காப்பாற்றிய மக்களும் மதம் மதம்  ,சாதி , இயக்கம் மற்றும் கட்சி  பார்க்காமல்  அவர்கள் கண்ட அனைத்து மக்களையும் காப்பற்றினார்கள்.

நீங்கள் எந்த மதத்தையோ பின்  பற்றி கொள்ளுங்கள் அது உங்கள் உரிமை.அதே நேரத்தில் சமூக அர்ப்பணிப்பு செய்யும் மக்களை மதம் கடந்து  மனம் திறந்து பாராட்டுங்கள்.அது உங்கள் கடமை.

சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதிலும் பல அமைப்புகள் மற்றும் கட்சிகள் மதம் மற்றும் சாதி வேறுபாடு இல்லாமல் ஈடுபட்டு வருகின்றன.அவை பற்றிய புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பதிபவர்கள் ஊடகங்களில் மற்றும் பேஸ்புக்கில் பெரும்பாலோர் தங்களுக்கு பிடித்தமான கட்சிகள்,இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் மற்றும் மதங்கள் பார்த்தே லைக் செய்யவும் ஷேர் செய்யவும் செய்கின்றனர். மற்றும் வெளியிடுகின்றனர்.

காப்பாற்றிய யாரும் தங்கள் மதம் மற்றும் இனம் பார்த்து மக்களை காப்பாற்ற வில்லை.மனிதாபிமானம் கொண்டு அனைத்து மத மற்றும் பிரிவு மக்களையும் அவர்கள் காப்பாற்றினார்கள்.உறைவிடம் மற்றும் உணவு கொடுத்த போது கூட அவர்களின் மதத் தளங்களில் வைத்து கொடுத்து இருக்கலாம், ஆனால் கொடுக்கப் பட்டவர்கள் மதம் பார்த்து கொடுக்கப் பட வில்லை.மனிதம் அன்பு மற்றும் கருணை கொண்டே அனைத்து அனைவருக்கு உதவினர்.

எனவே அடை மழை முடிந்து மக்கள் ஒருவரையொருவர் புரிந்து அன்பு மழை பொழியும் இத்தருணத்தில் நாம் பரந்த இதயத்தோடு தங்களை இந்த நிவாரண பணியில் ஈடு படுத்திய அனைவரையும் பாராட்டும் முகமாக அவர்களின் தியாகம் மற்றும் சேவை குறித்த புகைப் படங்களை ஷேர் செய்யவும்,லைக் செய்யவும் செய்திகளை வெளியிடவும் செய்ய வேண்டும்.இது மனித குல சேவையில் தம்மை அர்ப்பணித்து நம் சக சகோதரிகளை காப்பாற்றிய மக்களுக்கு நம்மால் முடிந்த ஊக்குவிப்பும் பாராட்டும் ஆகும்.

துயர்மிகு இத்தருணத்தில் மக்களை காப்பாற்றுவதில் மதம் சாதி பார்ப்பவர்களும்,காப்பாற்றிய அமைப்பு மற்றும் மக்களை மதம் பார்த்து உள்நோக்கத்துடன் அவர்களை பாராட்ட ஊக்குவிக்க அல்லது அந்த செய்திகளை மறைப்பவர்கள்  மருத்துவ போர்வையில்  இதயம் கொண்டிருக்கலாம்.மனிதாபிமான பார்வையில் அவர்கள் இதயம் இல்லாதவர்கள்.

மழை மதம் பார்க்க வில்லை.எல்லோருடைய வீட்டிலும் புகுந்தது.அதில் பாதிக்கப் பட்ட மக்களை காப்பாற்றிய மக்களை காப்பாற்றிய மக்களும் மதம் பார்க்க வில்லை அவர்கள் கண்ட அனைத்து மக்களையும் காப்பற்றினார்கள்.

நீங்கள் எந்த மதத்தையோ பின்  பற்றி கொள்ளுங்கள் அது உங்கள் உரிமை.அதே நேரத்தில் சமூக அர்ப்பணிப்பு செய்யும் மக்களை மதம் கடந்து  மனம் திறந்து பாராட்டுங்கள்.அது உங்கள் கடமை.

News

Read Previous

மகான் மன்னர்

Read Next

சவால்களுக்குச் சவால்விடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *