தேவர் மாலை

Vinkmag ad

10530658_701374299915696_1312871001350167599_nVignesh Tuticorin

தேவருக்கு சிலை வைத்து வழிபடும்
சிட்ட வண்ணான்குளத்தைச் சேர்ந்த சோலைக்குடும்பன் {பள்ளர் }

அவர்களின் நெஞ்சம் நிறைந்த வார்த்தைகள் !
****************************************************************
நாங்கள் தேவரை தெய்வமாக வணங்குகிறோம்.அதனால்
அவர் போட்டோவை எங்கள் வீட்டில் வைத்துள்ளோம்.
தேவர் எழுதி கொடுத்த சொத்தில் தான் இந்த ஊரே பிழைத்துக் கொண்டிருக்கிறது,
தேவரும் தேவருடைய சொத்தும்தான் இன்று எங்களை கௌரவமாக வாழவைத்துக்
கொண்டிருக்கிறது.

அவர் நினைத்திருந்தால் அவருடைய சொத்துக்களை அவருக்கு
விருப்பப் பட்டவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கலாம் .
ஆனால் அவர் நிலத்தில் உழுது வேலை செய்த மக்களுக்கு ,
யார் யார் எத்தனை ஏக்கர் உழுதார்களோ அவர்களுக்கே
அத்தனை ஏக்கர் நிலத்தையும் எழுதிக் கொடுத்தார்.

“ஒரு சமயம் பதநீர் குடிப்பதற்கு ஊர் மக்கள் சிலரோடு தேவரும்
ஒரு சாவடியில் அமர்ந்து இருக்கிறார் .அப்போது பதநீர்
குடிப்பதற்கு ஈயத்தினால் ஆன டம்ளர் இருக்க அதை
தாழ்த்தப்பட்ட ஒருவர் , தேவர் முதலில் பதநீர் குடித்த பின்பு
அந்த டம்ளரை மற்றவர்கள் குடிக்கட்டும் என்று எடுத்து
வைத்துக் கொண்டார்.

இதைக் கவனித்த தேவர் யார் குடித்தால் என்ன , நீயே முதலில் அந்த டம்ளரில்
குடி என்று அந்த தாழ்த்தப்பட்டவரை பதநீர் குடிக்கவைத்து
பின்னர் தானும் அந்த டம்ளரிலேயே பதநீர் குடித்தார்.

இப்படி வித்தியாசம் பார்க்காத தேவரை ஜாதி வித்தியாசம்
பார்ப்பவர் என்று பிறர் சொல்வது மனசாட்சி இல்லாத
மனிதர்களால் மட்டுமே முடியும்” என கண்கலங்கி வருத்தை பகிர்ந்தவர், எங்கள்
ஊர் பிள்ளைகளுக்கு தேவரைப் பற்றி மிக தெளிவாக சொல்லிக் கொடுத்துள்ளோம்
என்றார் .

News

Read Previous

ப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல் – மின்னூல் – கார்த்திக் சோமலிங்கா

Read Next

புரையோடியிருக்கும் மறக்கமுடியாப் பழக்கங்கள் !

Leave a Reply

Your email address will not be published.