தெரிந்து கொள்வோமா?

Vinkmag ad

தெரிந்து கொள்வோமா?

அல்ஹாஜ். S.R. ஹமீதுல்லா – கோபிசெட்டிபாளையம்

 

இந்தியாவின் தேசிய பறவையாக மயில் 1963-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.

தேசிய அளவில் நடைபெற்ற இந்தியாவின் முதல் கால்பந்து போட்டி 1863-ம் ஆண்டு நடைபெற்றது.

உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை என்ற அழைக்கப்படுபவர் ரிப்பன் பிரபு ஆவார்.

இந்தியாவின் மக்கள் தொகை கோட்பாட்டினை வழங்கியவர் மால்தஸ் என்பவராவார்.

இந்திய ரிசர்வ் வங்கி 1949-ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டது.

இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை பெங்கால் கெஜட், இடம் கல்கத்தா. வருடம் 1786.

முதன் முதலில் சத்தியகிரகப் போர் 1917-ல் மகாத்மா காந்தியால் பீகாரில் உள்ள சம்ப்ரான் என்னும் இடத்தில் விவசாயிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி ஜோக் நீர்வீழ்ச்சியாகும் இதன் உயரம் 253 மீட்டர்.

உலகின் உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல். இதன் உயரம் ஆயிரம் மீட்டர். நாடு வெனிசுலா.

வானொலி ஒலிபரப்பு முதன்முதலில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு 1927. இடம் கல்கத்தா மற்றும் மும்பை.

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் முஹம்மது பின் காசிம். எட்டாம் நூற்றாண்டில்.

கிரானைட் நகரம் என்றழைக்கப்படுபவை அபர்டீன், ஸ்காட்லாந்து., அயர்லாந்து மற்றும் மரகதத் தீவு ஆகும்.

கங்காரு குட்டி பிறக்கும் போது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.

லிப்ஸ்டிக்கில் மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இறால் மீனின் இதயம் அதன் தலையில் உள்ளது.

பனிக்கரடிகள் எல்லாவற்றையும் தம் இடது கைகளாலேயே செய்யும்.

பட்டாம்பூச்சிகள் தம் பாதங்கள் வழியே சுவையை உணரும்.

ஒரு மரங்கொத்தியால் ஒரு நொடியில் இருபது முறை மரத்தைக் கொத்த முடியும்.

பச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது.

 

நன்றி : நர்கிஸ் – டிசம்பர் 2014

 

News

Read Previous

சேனா ஆனா – ஓர் இலக்கணம்

Read Next

ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?

Leave a Reply

Your email address will not be published.