தமிழ் எழுத்துக்களின் இடியாப்பச் சிக்கலும் கால்டுவெல் ஐயரின் கைங்கர்யமும்

Vinkmag ad
  1. தமிழ் எழுத்துக்கள் சமஸ்கிரிதத்திலிருந்து இரவலாகப் பெற்றது என்றும் தமிழ்மொழி வரிவடிவம் பெற உறுதுணையாக இருந்தவர்கள் வடபுலத்திலிதுந்து புலம் பெயர்ந்த வேதியர்கள் என்றும் கால்டுவெல் எழுதியது இன்றும் மறுதளிக்கப்படாமல் நின்று நிலவுகிறது
  2. டாக்டர் கால்டுவெல்லுடன் கருத்தொத்த புஃக்ளர் மற்றும் கிரியெர்சன் போன்ற மேலைநாஅட்டு அறிஞர்கள் தமிழ் வட்டெழுத்து வரிவடிவங்கள் அசோகரின் பிராமி எழுத்துக்களின் மறுபதிப்பு அல்லது தழுவல் என்ற கோட்பாட்டை போதுமான ஆதாரங்கள் இன்றி முன்மொழிந்தனர்
  3. திருவாளர் தாமஸ், டாக்டர்.ரைஸ் டேவிஸ் மற்றும் புரூனெல் ஆகியோர் தமிழ் வட்டெழுத்து தமிழர்களால் அவர்களின் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்டு வளமை பெற்றது என்ற மாறுக் கோட்பாட்டை முன்வைத்தனர்
  4. சமஸ்கிரித  வயப்பட்ட திராவிட அறிஞர்கள் ஆதாரம் இல்லாத கால்டுவெல் கருத்தின்பக்கம் சாய்ந்து தமிழின் தோற்றத்துக்கும் கோட்பாட்டுக்கும் முரணாண ஒரு கருத்தை ஆதரித்து அதுவே உண்மை என்று நம்பச் செய்தனர்
  5. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்று திருக்குறளும் எண்ணுன் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று அவ்வையாரும் குறிப்பிடுவதால் அறியப்படும் பொருள் தமிழ் எழுத்த்துக்கு இரண்டு வடிவம் என்பதாகும்.  ஒன்று கண்ணெழுத்து என்ற கண்ணால் காணும் வரிவடிவம் மற்றொன்று எண்ணத்தில் நிலவும் எண்ணெழுத்து என்பவையாகும்
  6. பதின்மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி பனந்தியாரின் இலக்கணம் முதல் பல இலக்கண நூல்கள் வெளியிட்டிருந்தும் தமிழ் எழுத்தின் வரலாற்றை இவ்வாசிரியர்கள் மூடி மறைத்துவிட்டார்கள் என்ற ஐயாப்பட்டு உள்ளது
  7. இன்று வழக்கில் உள்ள தமிழ் வரிவடிவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வரிவடிவத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.  பலமுறை மாற்றம்பெற்றே இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்
  8. தமிழகத்தில் இரண்டுவிதமான வரிவடிவங்கள் வழக்கில் இருந்தன என்றும் ஒன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட வட்டெழுத்து அல்லது சேர-பாண்டிய வரிவடிவம் என்றும் மற்றொன்று சங்கதவயப்பட்ட திராவிடர்கள் உருவாக்கிய கிரந்த-தமிழ் வரிவடிவம் என்று மொழியியலார் கூறும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன
  9. வட்டெழுத்தின் தோற்றம் மற்றும் கோட்பாடை அறிய ஏதுவாக இரண்டு கேள்விகள் கேட்கலாம்.
  10. ஒன்று வட்டெழுத்து தமிழகத்தில் எப்போது அறிமுகமானது?.
  11. இரண்டு வட்டெழுத்து வரிவடிவம் தமிழர்களால் குறிப்பகத் தமிழ் வணிகர்களால் நேரடியாக மத்திய கிழக்கில் செமெடிக் அல்லது சுமேரியாவில் இருந்து கணரப்பட்டதா அல்லது அசோகரின் பிராமி வரிவடிவத்திலிருந்து மாற்றம்பெற்றதா?
  12. கல்வெட்டாய்வாளர்கள் வட்டெழுத்து ஆவணங்கள் எட்டாம் நூற்றாண்டளவுக்கே காணக்கிடைப்பதன் அடிப்படையில் தொல்காபியர் காலம் கி.பி எட்டாம் நூற்றாண்டு என்று ஒரு சாராரும் (பானினிக்கு முற்பட்ட) ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற குறிப்பின் அடிப்படையில் தொல்காப்பியர் காலம் கி.றித்து பிறப்பதற்கு முற்பட்டது என்றும் கூறுவதால் வட்டெழுத்து வரிவடிவின் தோற்றம் கி.பி யா அல்லது கி.முவா என்ற இடியாப்பச் சிக்கல் தோன்றியுள்ளது
  13. மத்திய கிழக்கு அல்லது வடகிழக்கு ஆசியாவிலிருந்து சுமேரிய வரிவடிவத்தை முதலில் கொண்டுவந்தவர் யார்? தமிழ் வணிகர்களா? அசோகரா? என்ற கேள்வியும் எழுகிறது
  14. தொல்காப்பியம் என்ற இலக்கணம் வட்டெழுத்துக்கென்று உருவானது அதை கிரந்த தமிழ் வரிவடிவத்துக்குச் செயல்படுத்துவாது மாரியம்மாவுக்கு நாடிபார்த்து சொர்ணக்காஅவுக்குச் சூரணம் கொடுப்பதுபோல் வில்லஙக்மான வேலை அல்லவா என்று வரலாறுசார் மொழியியலார் அங்கலாயிக்கிறார்கள்
  15. இன்றைய வரிவடிவம் என்பது உண்மைத் தமிழ் அல்ல என்றும் அதன் தோற்றம் ம்ற்றும் கோட்பாடை சமஸ்கிரிதம் டு தமிழ் என்ற ஒற்றையறிப்பாதையைத் தவிர்த்து சுமேரிய வரிவடிவம் வட்டெழுத்து மற்றும் பிராமி வரிவடிவம் பாற்றித் தீவிர ஆய்வு செது முடிவெடுக்க வேண்டும் என்ற நிலையில் கல்டுவெல் ஐயர் தமிழ் வரிவடிவக் கோட்பாட்டின் சமஸ்கிதக் கோட்பாடை ஆதரித்து இன்றைய தமிழ்வரிவடிவ இடியாப்பச் சிக்கலுக்குக் காரணமாக இருந்துவிட்டாரே என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை
சவடால் வைத்தி

News

Read Previous

ஷார்ஜா முஹம்மது அலி மருமகன் சென்னையில் வஃபாத்து

Read Next

மொழியியல் பின்னணியில் படித்தால்தான் ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம், எழுதலாம்

Leave a Reply

Your email address will not be published.