தமிழ்ப்பேராய விருதுகள் – 2016

Vinkmag ad

தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

முத்திரை -தமிழ்ப்பேராய விருது  ஸ்ரீ thamizhperaayaviruthu05

தமிழ்ப்பேராய விருதுகள் – 2016

Thamizh Academy Awards – 2016

பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன (Nominations Invited)

  திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம், மிழ்ப்பேராயம் – Thamizh Academy என்னும் ஓர் அமைப்பினை நிறுவித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இணையவழியிலான தமிழ்க்கல்வி, தமிழ்ச்சமயக்கல்வி, கணிணித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின்வழி பட்டயப் படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகளை வழங்குவதோடு அரிய நூல்களைப் பதிப்பு செய்யும் பணியையும் செய்துவருகிறது. இவற்றோடு தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனைகள்புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.20,50,000 பெறுமான 11 வகை விருதுகளை 2012, 2013, 2014, 2015ஆகிய 4  நான்கு ஆண்டுகளாக வழங்கிவந்துள்ளது. இவ்வாண்டு முதல் முதல் இவ்விருதுகளின் விதிகளில் சில மாற்றங்களும் புதிய விருதுச் சேர்க்கையும் செய்யப்பட்டுள்ளன.
  இளம் தமிழ் ஆய்வறிஞருக்கு வழங்கப்பட்டு வரும் வளர்தமிழ் விருது மறைந்த நமது மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் இவ்வாண்டுமுதல் ‘அப்துல்கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது’ என்ற பெயரில் வழங்கப்படவுள்ளது.
  சிற்பம், ஓவியம் சார்ந்த நூல்களுக்கு ஆனந்தகுமாரசாமி கலை விருதும், தமிழிசை சார்ந்தநூல்களுக்கு முத்துத் தாண்டவர் தமிழிசை விருதும் வழங்கப்பட்டுவந்தன. இந்த இருவிருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்படும் நூல்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு இருவிருதுகளையும் ஒருங்கிணைத்து இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய நான்கு துறைகளுக்கும் சேர்த்து ஒரே விருதாக ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது /முத்துத்தாண்டவர் தமிழிசை விருது என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இதழ்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்க் கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை முன்னிறுத்தும் வார, மாத, காலாண்டு இதழ்களுக்குச் சுதேசமித்திரன் இதழ் விருது நூறாயிரம்  உரூபாய்க்குப் புதிய விருதாக வழங்கப்படவுள்ளது.
  இதேபோன்று தமிழ் மொழியின் வளர்ச்சி, கல்வி, கலை, பண்பாடு போன்றவற்றிற்காக அயராது பாடுபட்டுவரும் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் செயல்பட்டுவரும் தமிழ் அமைப்புகளுக்குத் தனித்தனியாகத் ‘தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதுகள்’இவ்வாண்டுமுதல் புதிதாக வழங்கப்படவுள்ளன.
  சிறந்த நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்களுக்கும் உரிய பாராட்டும் தொகையும் வழங்கவேண்டும் என்ற நோக்கில் தேர்ந்தெடுக்கப்படும் 8 நூல்களையும் வெளியிட்டபதிப்பகங்களுக்கும் விருதுத் தொகையும் பாராட்டும் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது.
  இவ்வாறாகத் தமிழ்ப்பேராய விருதுகள் 2016 முதல் 14பேருக்கு 22 நூறாயிரம்  உரூபாய்த் தொகையுடைய விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு வழங்கப்படவிருக்கும் விருதுகளும் தொகையும் விதிமுறைகளும் இறுதியில் தரப்பட்டுள்ளது.
பரிந்துரைகளும் நூல்களும் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 30.06.2016.
பரிந்துரைகளையும் நூல்களையும் அனுப்பவேண்டிய முகவரி:
துறைத்தலைவர், தமிழ்ப்பேராயம்,
மைய நூலகக் கட்டடம், நான்காம் தளம்,
எசு.ஆர்.எம். பல்கலைக்கழகம்,
காட்டாங்குளத்தூர் – 603 203.
தொலைபேசி: 044 27417375
மின்னஞ்சல்: tamilperayam@srmuniv.ac.in
தமிழ்ப்பேராய விருது-விவரம்01 -thamizhperaayaviruthu01
தமிழ்ப்பேராய விருதுவிவரம் - thamizhperaayaviruthu02

News

Read Previous

தவிர்ப்போம் ஸஹர் நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை…!

Read Next

உள்ளமதைத் திருப்புங்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *