தன்னம்பிக்கை என்னும் தாரக மந்திரம்

Vinkmag ad

ஒரு மனிதன் சாதனையாளராவதற்கு முக்கியக் காரணம் அவர் மீது அவர் கொண்ட தன்னம்பிக்கைதான்.

முயற்சி செய்வதோடு மட்டும் அல்லாமல், அவர் மீது கொண்ட தன்னம்பிக்கையும், விடா முயற்சியுமே ஒருவரை உயர்த்துகிறது.

எனவே, இந்த புத்தாண்டு பிறப்பு முதல் நாம் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய தாரக மந்திரங்கள் இவைதான்.

* தாழ்ந்த மனப்பான்மையை விரட்டி விட்டு உயர்வாக எண்ணுங்கள்

* எச்சூழலிலும் உங்களது திறமையை பிறருடன் ஒப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்

* வெற்றியையும், தோல்வியையும் சமமாகப் பாவிக்க பழகிக் கொள்ளுங்கள்

* கடந்த காலத்தில் சந்தித்த தோல்விகளை நினைத்து சோர்வு கொள்ளாதீர்.

* தடைகளையெல்லாம் வெற்றிப்படிக்கட்டுகளாய் மாற்றிக்காட்டியவர்களை எப்போதும் மனதில் நிறுத்துங்கள்

* எதுவும் முடியும் என்பதே உங்களது தாரக மந்திரம்.

* மனதில் தெளிவும், நிதானமும் வேண்டும்

* தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை அதிகம் படியுங்கள்

* ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருங்கள்.

* எந்த ஒரு செயலிலும் உறுதியுடன் இருக்கப் பழகுங்கள்.

* உங்களை நீங்களே மதியுங்கள். உங்களைப் போல பிறரையும் உணருங்கள்.

சில பொன்மொழிகளும்..

* சகிப்புத் தன்மையும், விடா முயற்சியும், அறிவுத் திறனும் எந்த நாளிலும் ஒருவனைத் தாழவிடாது – சார்லஸ் ஸ்மித்

* பறவைகளுக்கு இரை தயாராக இருக்கிறது. ஆனால் அது கூட்டுக்குள் கொண்டுவந்து கொடுக்கப்படுவதில்லை – இங்கிலாந்து

News

Read Previous

ஒளிரும் மரங்கள்

Read Next

துபையில் பணி வாய்ப்பு – ஒரு பார்வை

Leave a Reply

Your email address will not be published.