சிரிப்பு

Vinkmag ad

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க “டிபன் ரெடியா?”ன்னு கேட்டா “நேத்தே ரெடி”ங்கறான்!

**************************************

அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?

ஏன் ?

அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம்

**************************************
எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்

வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?

இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.

ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான

**************************************

என்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா .. ?

ஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்ட

**************************************

காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?
ஏன் ?
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்ச

**************************************

ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.
கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?
ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.
கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?
ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.

**************************************

நர்ஸ் – ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க

டாக்டர் – புரியாமல் பேசாதே. .. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்

**************************************
உனது கடைசி ஆசை என்ன ?

சரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்

**************************************
ஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு

அது, பாடியை வீட்டுக்கு எடுத்து போக ஆம்புலன்ஸ் வாடகை

**************************************

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

கண்டிப்பா இருக்கே.

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே

**************************************

என்னப்பா * காபியில ஈ செத்துக்கிடக்குது.. .?

ஸ்பெஷல் காபியிலதான் சார் ஈ உயிரோட இருக்கும

**************************************

பார்பர் : “சார், கொஞ்சம் முகத்தை திருப்ப முடியுமா?”

நபர் : “அதுக்குள்ளே இந்த பக்கம் முடிஞ்சுதா?”

பார்பர் : “இல்லை சார். எனக்கு இரத்தம்னா அலர்ஜி.”

**************************************

டிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”

நபர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”

admin

Read Previous

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி வழங்கி வருகின்றது.

Read Next

கடன் அட்டையை (Credit Card) பாதுகாப்பாக பயன்படுத்த இருபது ஆலோசனைகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *