சமூக மாற்றத்தின் தேவைகள்

Vinkmag ad
சமூக மாற்றத்தின் தேவைகள்
பார்வை: 
ஒருங்கிணைந்த அறிவியல்.
நோக்கம்: 
அரசுகளின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்த்தல், புதிய திட்டங்களை அரசு வகுக்க ஆலோசனை வழங்கல், ஒருங்கிணைந்த விவசாயம், கூட்டுப்பாசனம், பசுமைக்குடில் விவசாயம், விளைபொருள் மதிப்புக்கூட்டல் தொழில்கள், வீட்டுத் தொழில்கள், மக்கள் கூட்டுறவுப்பள்ளி, பாரம்பரிய மருத்துவம், சாதிகளற்ற சமுதாயம், பாரம்பரியக் கலைகள்.
இலக்கு: 
தன்னிறைவு பெற்ற உயிர்ப்புள்ள கிராமங்கள் மற்றும் சிறுநகரங்கள்.
செயல்பாடுகள்:
1. அரசுகளின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்த்தல்: இணையதளத்தில் / இணையதளங்களில், அரசின் விவசாய, தொழில் திட்டங்களும், அதிகாரிகள், மானியங்கள் விவரங்களும் நடப்பு நாள் வரை புதுப்பிக்க வேண்டும். பழையன பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க வேண்டும். சமூக ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் கொண்டு சேர்த்தல். சாதாரண விலைக்கு விண்ணப்பங்களை அச்சிட்டுத் தருதல். மாவட்டம், வட்டந்தோறும், குறுஞ்செய்தித்தாள், சில தொடர்புள்ள விளம்பரங்களைக் கொண்டு வெளியிடல். அதற்கான செலவை, செய்தித்தாளே பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. புதிய திட்டங்களை அரசு வகுக்க ஆலோசனை வழங்கல்: மக்களிடையே வினையாற்றுகையில் வெளிப்படும் தேவைகளுக்கேற்ப, வெவ்வேறு புதிய திட்டங்களை வகுக்க, சரியான அதிகாரிகளை, துறைகளைத் தொடர்புகொள்ளல். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுக்கு நினைவூட்டி வலியுறுத்தல். சட்டசபை மற்றும் நாடாளுமன்றங்களில், திட்ட வரைவை முன்மொழிதல்.
3. ஒருங்கிணைந்த விவசாயம்: செலவில்லா விவசாயம், கருத்தைப் பரப்புதல், பல்வேறு உற்பத்திக்கான சேவைகளை ஒருங்கிணைத்தல், கடன், காப்பீடு மற்றும் மானியங்களுக்கான ஆலோசனை, பாரம்பரிய விதை வங்கிகளை மாவட்டம் தோறும் உருவாக்கல், கிணறு, ஆழ்துளைக் கிணறு அமைத்தல் ஆலோசனை, மண்வளம் பரிசோதனை. தாமாகவே இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை உரம் விற்றல், இயற்கை கிருமிநாசினி தயாரித்தல் – விற்றல், விவசாய கருவிகள் வாடகை மையம், உற்பத்திப் பொருள் சேமிப்பு, செயலிகள், இணையதளம் மூலம் விற்பனை ஒருங்கிணைப்பு. கோழி, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பு. காய், கீரை, கனிகள் வளர்ப்பு. மரங்கள் வளர்ப்பு. மீன் வளர்ப்பு. தேனீ வளர்ப்பு. மலர்கள் வளர்ப்பு. ஈச்சமரங்கள் வளர்த்தல். மருந்துப் பயிர்கள்.
4. கூட்டுப்பாசனம்: கருத்தைப் பரப்புதல், மழைநீர் சேமித்தல், சொட்டுநீர்ப் பாசனம், ஆலோசனை மற்றும் சேவைகளை ஒருங்கிணைத்தல், கடன், காப்பீடு மற்றும் மானியங்களுக்கான ஆலோசனை வழங்கல், ஒப்பந்தம் ஆலோசனை வழங்கல்.
5. பசுமைக்குடில் விவசாயம்: வெயில், மழை, காற்று, மண்சூடு போன்றவற்றால் நேரும் இழப்புகளைத் தவிர்க்க பசுமைக்குடில்கள் அவசியம். பலவிதமான பயிர்களைச் செய்யவும் பசுமைக்குடில் உதவும். அதற்கான சேவைகளை ஒருங்கிணைத்தல், கடன், காப்பீடு மற்றும் மானியங்களுக்கான ஆலோசனை வழங்கல்.
6. விளைபொருள் மதிப்புக்கூட்டல் தொழில்கள்: விளைபொருட்களைப் பாதுகாக்கும் முறைகளுக்கு ஆலோசனை வழங்கல். உலர்த்துதல், குளிர்வித்தல், பதப்படுத்தல், அரைத்தல், கொள்கலன்களில் சேமித்தல், தகுந்த விலை சந்தையில் நிலவும்போது விற்றல், ஏற்றுமதி, போன்றவை.
7. வீட்டுத் தொழில்கள்: கோழி, ஆடு, மாடு வளர்ப்பு. பற்பொடி தயாரித்தல். சோப்புகள் தயாரித்தல். சமையல். ஊதுபத்தி தயாரித்தல். மெழுகுவர்த்தி தயாரித்தல். பனைப் பொருட்கள், தென்னைப் பொருட்கள் தயாரித்தல். மிதியடி தயாரித்தல். தோல்பொருள் தயாரித்தல், உலோகப் பொருள் தயாரித்தல். விவசாய கருவிகள் பூட்டுதல். தையல் தொழில். மரத்தொழில்வெல்டிங். குழாய் இணைப்பு. பொம்மைகள் தயாரிப்பு. மண்பாண்டம். கட்டிடத் தொழில். நெசவுத் தொழில். மரச்செக்கு. நவதானியங்கள். சாண எரிவாயு. பால் பொருட்கள் தயாரித்தல். நெல்தாள், பனை ஓலை தொப்பிகள் தயாரித்தல். குடைகள் தயாரித்தல். தீவனங்கள் தயாரித்தல்.
8. மக்கள் கூட்டுறவுப்பள்ளிமக்களையே உறுப்பினர்களாகக் கொண்டு கூட்டுறவு முறையில் / நிரந்தர அறக்கட்டளை மூலம் பள்ளிகளை உருவாக்குதல். சுழற்சி முறையில் தலைமை. வெளிப்படையான வரவு / செலவு கணக்கு. தமிழ் வழிக்கல்விக்கு முதலிடம். ஆங்கிலமொழியை ஆழமாகக் கற்பித்தல். ஆங்கிலப் பேச்சு மொழியை இயல்பாக்குதல். இந்தி பேச்சுமொழியை மட்டும் கற்பித்தல். பல கலைகள் மற்றும் திறன்களை வளர்த்தல். பொது நூலகம் அமைத்தல்.
9. பாரம்பரிய மருத்துவம்: இயற்கை மருத்துவம், சித்த, ஆயுர்வேத, ஓமியோபதி மருத்துவம். அடிப்படை ஆங்கில மருத்துவம். மருந்துப் புத்தகம். மருந்துப்பெட்டிகள். மருந்துத் தாவரங்களைக் கண்டறிதல். வர்ம மருத்துவம்.
10. சாதிகளற்ற சமுதாயம்: சாதிகளின் தோற்றம், வளர்ச்சி, சமூக இயக்கம். மாற்றத்தின் அவசியம். மனவியாதி. கட்டுமானங்கள்.
11. பாரம்பரியக் கலைகள் மற்றும் விளையாட்டுகள்:  இயல், இசை, நாடகம், ஓவியம், சிற்பம். யாழ், பறை, குழல். சிலம்பம். வர்மக்கலை.

 

News

Read Previous

முனைவர் வே.வசந்திதேவி

Read Next

தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *