உலக ஊடக சுதந்திர நாள்: மே 3

Vinkmag ad
உலகமெங்கும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க ஐ நா பேரவை மே 3 ஆம் நாளை ஊடக சுதந்திர நாள் என அறிவித்துள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் கட்சி, ஆட்சி முதலான காப்பரண்கள் இல்லாமல் களத்தில் நிற்பவர்கள் ஊடகவியலாளர்கள். சர்வாதிகார ஆட்சியாளர்களின் முதல் இலக்காக இருக்கும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாக்குதலுக்கு ஆளாவதும் படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஊடக சுதந்திரத்தைப் பொருத்தவரை இந்தியா மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 179 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 140 ஆவது இடத்தில் இருக்கிறது. இணைய தணிக்கை; சத்திஸ்கர்,காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் முதலானவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கும் ‘எல்லைகளில்லா ஊடகவியலாளர்கள்’ என்ற அமைப்பு மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியா ஊடக சுதந்திரம் என்ற விஷயத்தில் இப்படி பின்தங்கியிருப்பது  சரியல்ல என்று கூறியிருக்கிறது.
இன்றைய தகவல் யுகத்தில் ஊடகங்களே ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக உள்ளன. அவற்றின் சுதந்திரம் குடிமக்களின் சுதந்திரத்தோடு இரண்டறக் கலந்துள்ளது. தமது உயிரையும் பணயம் வைத்து உண்மைக்காக வாதாடும் ஊடகவியலாளர்களை வாழ்த்துவோம்.

News

Read Previous

சுய தொழில்கள்- சமோசா தயாரிப்பு

Read Next

புன்னகை -புதுசுரபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *