இந்திய வரலாறு மாற்றியமைப்பு

Vinkmag ad

இந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற்றில் மறைக்கும் முயற்சி!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய துணைக் கண்டம் ‘இண்டஸ்’ நதியின் பெயரால் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பில் இந்தியாவின் பெயர் மஹாபாரத புராணத்தில்  வரும் பரத மகாராஜாவின் பெயரினை தாங்கி பாரத நாடு என்றுள்ளது. மஹாபாரதத்தில் பரதர் கி.மு 5 வது நூற்றாண்டில் இந்தியா முழுவதும் ஆண்டதாக சொல்கிறது.

 

ஆனால் உலக வரலாற்று ஆசிரியர்கள் இந்திய நாகரீகம், உலகில் பழமையான நாகரீங்களான மெசொபொடோமிய, எகிப்து போன்றது என்கின்றனர். தற்போது மொகஞ்சோதர-ஹரப்பா நாகரீக நகரங்கள் பாக்கிஸ்தான் பஞ்சாப்-சிந்து மாகாணங்களில் உள்ளன. அவைகளை வரலாற்று ஆசிரியர்கள் கி.பி. 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்தனர். அதேபோன்று தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தில் பாலத்தால் என்ற இடத்தில் உள்ள பழமை நாகரிகமும் கி.பி.1962ல் கண்டுபிடிக்கப் பட்டது. அவைகளை கண்டு பிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கூறிய நாகரியங்கள் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறினர்.

நான்கு வேதங்களை உட்பட்ட காலங்கள் வேதிக் காலங்கள் என்கின்றனர். அவை கி.பி.150லிருந்து-கி.பி.1700 ஆண்டுகளுக்குட்பட்டது என்கின்றனர். இந்த காலக் காட்டத்தில் தான் ஆரிய வம்சாவளியினர் தங்களுக்கென்று ஒரு மதமாக ‘சனாத்தான் தர்மம்'(இறைவன் கட்டளை) என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அது காலப் போக்கில் ஹிந்துயிசமாக மாறிவிட்டது. ஆரியரிகள் ஒன்று கூடும் இடத்திற்கு ‘சிந்துஸ்’ என்று அழைத்தார்கள். ஆரம்பத்தில் ‘ஒரு கடவுள்’ என்ற கொள்கையினை கொண்டாலும் பிற்காலங்களில் பல உருவ வழிபாடுகள் உள்ளே புகுத்தப் பட்டது.

 

 

நான்கு வேதங்களை தவிர்த்து  ஹிந்து மத இலக்கிய படைப்புகளான உபநிஷம், புராணம், மஹா பாரதம், ராமாயணம் இவையெல்லாம் கி.பி. 6வது நூற்றாண்டினைச் சார்ந்ததாகும். மகாவீரரும், கௌதம புத்தரும் இந்த காலக் கட்டத்தில் தான் ‘சனாத்தான் தர்மத்திலிருந்து’ பிரிந்து ஜைன, புத்த மதங்களை நிறுவினர்.

இந்தியாவின் வளத்தினை பற்றி கேள்விப்பட்ட பாரசீக சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ‘சைரஸ்’ கி.மு. 530ல் ஆக்கிரமிப்பு தொடங்க முதலாம் டாரஸ் ஆட்சி காலத்தில் பாரசீக சாம்ராஜ்யம் வட இந்தியாவில் ஆட்சி கொண்டது. அதன் பின்பு தான் கிரேக்க சக்கரவர்த்தி அலைக்ஸாண்டார் கி.மு.327ல் தனது ஆதிக்கத்தினை வட இந்தியாவில் செலுத்தினார்.

முதல் முதலில் முஸ்லிம் ஆதிக்கம் கி.பி. 712ல் முகமது பின் காசிம் காலத்தில் இன்றைய பாகிஸ்தானில் நிலை நிறுத்தப் பட்டது. அதன் பின்னர் பல குறுநில மன்னர் ஆட்சிகளாக, பல்வேறு மொழி, இன, மத மக்களை ஒருங்கிணைத்து முகலாய சாம்ராஜ்ய இந்தியா முழுவதும் நிருவப் பட்டது. அதன் பின்பு வந்த போர்த்துகீசியர், பிரெஞ் நாட்டினர் ஒரு சில பகுதிகளை பிடித்து ஆட்சி செலுத்தினர். இங்கிலாந்தில் உருவான  தொழில் புரட்சியின் காரணமாக நவீன ஆயுதங்களைக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா முழுவதும் நிலை நிறுத்தப் பட்டது ஒரு வரலாறு என்று உங்களுக்குத் தெரியும்.

ஆனால் சில இந்திய வரலாற்று மற்றும் மேற்கத்திய ஆசிரியர்கள் இந்திய நாட்டு நாகரியமே வெளி உலகிற்கு  தெரியக் கூடாது என்று பல நூல்களை கறுப்புக் கண்ணாடி பார்வையுடன் எழுதியுள்ளது வரலாற்று மாணவர்களுக்குத் தெரியும். சிவகங்கை மாவட்டம் கீழடி கிராம ஆராய்ச்சி இந்திய பழமை நாகரிகம் பறைசாற்றுகிறது. அதனை வெளிக்கொணராமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியும் எடுக்கப் பட்டதும் உங்களுக்குத் தெரியும். முதலில் ஆராய்ச்சி அதிகாரிகள் மாற்றப் பட்டனர். இப்போது அந்த கிராம மக்களில் சிலரைப் பிடித்து ஆராய்ச்சிக்கு எதிராக குரலும் எழுப்பியுள்ளதினை ஊடகங்கள் வாயிலாக நீங்கள் படித்து இருப்பீர்கள். ஆதிகால இந்திய திராவிட மக்கள் வட இந்தியாவிலிருந்து விரட்டபட்டதாக அவர்கள் தெற்கே தஞ்சம் புகுந்ததாகவும் கூறப் படுகிறது. தற்போதைய அமெரிக்காவினை செவ்விந்திய மக்கள் ஆட்சி செய்தனர். அவர்களை ஸ்பெயின், பிரிட்டிஷ் ஆட்சியினர் மலை பகுதிகளுக்கு அனுப்பி விட்டதும். ஒரு காலத்தில் ஸ்பெயின் நாட்டினவருக்கும், பிரிட்டிஷ் மக்களுக்கும் போர் ஏற்பட்ட பின்பு ஏக அமெரிக்காவை பிரிட்டிஷ் ஆட்சி கோலோச்சியது. அதன் அடையாளமான கோட்டைகள் இன்னும் அங்கே உள்ளது.

 

நான் மேலே சுட்டிக் காட்டிய வரலாற்று செய்திகளை மாற்றியமைத்து ‘ஹிந்துக்கள்’ தான் இந்திய துணைக்கண்டத்தின் ஆதிகால மக்கள் என்பதினை நிரூபிக்கும் விதமாக ரகசியமாக ஹிந்துத்துவ கொள்கைகைக் கொண்ட வரலாற்று ஆசிரியர்களைக்கொண்ட 14 உறுப்பினர் கொண்ட ஒரு குழு அமைத்து, அதன் தலைவராக ‘பழமை இந்திய வரலாற்று’ பேராசிரியர் கே.என் டிக்சித் தலைவராக நியமனம் செய்து அதற்கான முதல் கூட்டமும் நடத்தப் பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனைப் பற்றி நிருபர்கள் கேட்டபோது மைய அமைச்சர் மகேஷ் சர்மா ஒத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், ‘12,000 ஆண்டுகளுக்கு முன்பே ஹிந்து கலாட்சாரம் கோலோச்சி இந்தியாவில் இருந்ததாக கூறுவது’ வரலாற்று உண்மைகளை சோற்றில் முழு பூசணிக்காயினை’ மறைப்பது போன்று உங்களுக்குத் தெரியவில்லையா?

அது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி புத்தகள் மாற்றவும் முயற்சி கொண்டுள்ளதாக கூறியுள்ளார். தற்போதைய மைய அரசு ஹிந்துத்துவா கொள்கைகளைக் கொண்ட மாநில ஆளுநர்களையும், பல்கலைக் கழக துணை வேந்தர்களையும் நியமனம் செய்திருப்பது உங்களுக்குத் தெரியும். தமிழகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் போன்று அன்றாட அலுவல்களில் தலையிடுவதும் நீங்கள் அறிந்ததே. அந்த முயற்சிக்கு மகுடம் சூடுவதுபோல் ஆர்.ஆர்.எஸ். முக்கிய பிரமுகர் மன்மோகன் வைத்யா, ‘இந்தியாவின் கலர் காவி நிறம் தான், அதனை நிரூபிக்க இந்திய வரலாறு மாற்றியமைக்கப் படும்’ என்று கூறியிருப்பது அதிர்ச்சியான செய்திதானே! இந்தியாவினை ஜனநாயக நாடாக உள்ளத்தினை அமெரிக்கா போன்று குடியரசாக மாற்றி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே தேர்தல் நடத்தி இந்த திட்டத்தினை நிறைவேற்ற போவதாகவும் கூறப் படுகிறது.

இந்த முயற்சிக்குப் பின்பு இந்திய நாடு, ‘ஹிந்துஸ்தானாகவும்’ முஸ்லிம்களும், கிருத்துவர்களும் இரண்டாம் தர குடி மக்களாக மாற்றி ஒரு புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப் பட்டாலும் ஆச்சிரியப் படவேண்டாம்.  எனது தலைப்பில் சேற்றில் பூசணிக்காய் மறைக்க வேண்டாம் என்று கூறினேன். ஹிந்துஸ்தான் என மாற்றும் முயற்சியினைத் தான் சேறு என்று குறிப்பிட்டேன். ஆகவே  இந்திய வரலாற்றினை மத அடிப்படையில் பொய்யாக மாற்றி அமைக்கும் மைய அரசின் முயற்சியினை, சமூக ஆர்வலர்களும், வரலாறு படித்த மாணவர்களும், பொது சிந்தனையாளர்களும் குரல் எழுப்ப வேண்டும் என்றால்  சரிதானே!

News

Read Previous

இந்திய நகரங்களுக்கு தீராத தொல்லை தரும் நாய்களும் கொசுக்களும்…2

Read Next

ஆளுமை வளர்ச்சி – நாடகப் பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *