இந்தியன் குரல்

Vinkmag ad
இந்தியன் குரல் செய்தது ; 01-01-2015 வரை

16,000 கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்க உதவி.

கோரிக்கை மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை இல்லாமல் கிடந்த இரண்டு லட்சத்து எண்பதனாயிரம் (2,80,000) மேற்பட்ட பல்வேறு வகையான பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது தீர்வு செய்யாத, காலதாமதம் செய்யப்பட்ட மனுக்கள் தீர்வு காண உதவி .


100 க்கும் மேற்ப்பட்ட கடமையை செய்ய லஞ்சம், போலி ஆவணங்கள் மூலம் பதவி மற்றும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்கள் பதவி பறிப்பு மற்றும் கைது செய்ய நடவடிக்கை

நேர்மையாக செயல்பட்ட அலுவலர்களின் தேவையற்ற இடமாறுதல், தண்டனை, பணப்பயன் நிறுத்தம் என்று நேர்மைக்காக உயர் அலுவலர்களால் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளான அலுவலர்களுக்கு சரியான வழிகாட்டுதலுடன் நிவாரணம் மற்றும் அவ்வாறான உயர் அலுவலர்கள் தண்டனைபெற உதவி.

இதுபோன்ற உதவிகளை செய்துள்ளோம் என்பதில் மிகுந்த வருத்தமுடன் தெரிவிக்கின்றோம் . அரசு இயந்திரம் சாமானியர்களின் துயர் துடைக்க மறுத்ததால் இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. இனி வரும் காலம் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்து சாமானியர்களும் பயன் பெரும் வகையில் அரசு அலுவலர்கள் செயல்பட்டு எண்களின் சேவை தேவையில்லை எனு நிலை வரும் நாளே எங்களுக்கு மகிச்சியான நாளாகும்

அதுவரை இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்

 
சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு
 
எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்
 
நன்கொடை பெறுவதில்லை,  அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை, பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம்  வாங்குவதில்லை – இது இந்தியன் குரல் கொள்கை
 
தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் – இந்தியன் குரல் நோக்கம்
 
 நல்லவிசயம் நாலு பேருக்கும் பயன்பட இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள் நன்மக்களே!

https://www.facebook.com/myvoiceofindian

இந்தியன் குரல் அமைப்பை தொடர்புகொள்ள vitrustu@gmail.com

News

Read Previous

வாழையடி வாழையாய் தொடரும் வாழையின் பயன்கள்

Read Next

முதுமை இனிமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *