முதுகுளத்தூர் கல்வி மைய ஆண்டு விழா (15 மார்ச் 2009)

Vinkmag ad

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 15 மார்ச் 2009 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இஸ்லாமிய பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

விழாவிற்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ‘சிராஜுல் உம்மா’ மவ்லவி அல்ஹாஜ் எஸ்.அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ தலைமை தாங்குகிறார்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு உறுப்பினர்கள் பொறியாளர் ஆர். சாகுல் ஹமீது மற்றும் பி. அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பெரிய பள்ளிவாசல் உதவி இமாம் மவ்லவி எஸ்.டி. ஷேக் மைதீன் ஆலிம் மன்பஈ இறைவசனங்களை ஓதுகிறார்.

இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் ஹெச். ஏ. சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்துக்றார்.

இஸ்லாமிய பயிற்சி மைய மாணாக்கர்கள் ஜெ.நிலோபர் நிஷா, எஸ். ஹைருண் நிஷா, எஸ்.அப்துல் அஹது, பி. நிஹ்மத் நிஷா, ஏ.ஓ. தமீமா கனி, எஸ். நஜிமா பேகம் உள்ளிட்டோர் தாங்கள் பயிற்சி மையத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

மார்க்க போதனைத் தீர்வில் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பஈ, பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் உதவித் தலைவர் எம். சாகுல் ஹமீது அகியோரும்,

குர்ஆன் ஓதும் போட்டியில் சிறப்பிடம்  பெற்றவர்களுக்கு ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவர் பொறியாளர் எஸ். முஹம்மது இக்பால், திடல் ஷரியத்துல் இஸ்லாம் சன்மார்க்க சங்க தலைவர் எம். ஜஹ்பர் சாதிக் அலி ஆகியோரும்,

பள்ளித் தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் எஸ். வரிசை முஹ்ம்மது, திடல் ஜமாஅத் பொருளாளர் எம். தாஹிர் உசேன்,

மார்க்க போதனை வகுப்பிற்கு தொடர்ந்து வந்தவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் எம்.ஏ. அப்துஸ் ஸலாம் ரஹ்மானி ஆலிம் மன்பஈ, ஆசிரியர்கள் ஏ. அஸ்கர் அலி, எம். முஹம்மது முஸ்தபா கமால் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்குகின்றனர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமையாசிரியர் என். காஜா நிஜாமுத்தீன் குறைசி நன்றியுரை நிகழ்த்துகிறார்.

இப்பயிற்சி மையம் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகிறது.

மேலதிக விபரங்களுக்கு
ஹெச். ஏ. சுல்தான் அலாவுதீன் 944 27 57 338

admin

Read Previous

முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ மாண‌வி பிள‌ஸ் டூ தேர்வில் முத‌ல் இட‌ம்

Read Next

”மன நிறைவுடன் தாயகம் திரும்புகிறேன்” ! “முதுவைக் கவிஞர்” நெகிழ்ச்சி அறிக்கை !!

Leave a Reply

Your email address will not be published.