துபாயில் நடைபெற்ற முதுவை சங்கமம் 2011

Vinkmag ad

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் முதுவை சங்கமம் 2011 எனும் நிகழ்ச்சி 31.12.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயல் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், துணைத்தலைவர்கள் எஸ். சம்சுதீன், ஏ. ஜாஹிர் உசேன், முதுவை ஹிதாயத், எஸ். அமீனுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச்செயலாளர் ஏ அஹமத் இம்தாதுல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். செயல் தலைவர் ஹெச் இப்னு சிக்கந்தர் துவக்கவுரை நிகழ்த்தினார். துணைதலைவர் எஸ். சம்சுதீன், எஸ். அமீனுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்கள் மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதர் ஆலிம், முதுவை அப்துல் காதர் ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர். தாயகத்தில் நடைபெறும் சமுதாய மற்றும் கல்விப்பணிகளுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆற்றி வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.  அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 வரவு செலவு அறிக்கையினை பொருளாளர் ஏ ஜஹாங்கீர் சமர்ப்பித்தார். துணைப் பொதுச்செயலாளர் ஹபீப் திவான் நன்றி கூறினார். நிகழ்வினை முதுவை ஹிதாயத் தொகுத்து வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஹெச்.இப்னு சிக்கந்தர் தலைமையில் ஏ. அஹமது இம்தாதுல்லாஹ், ஹபீப் திவான், ஏ. ஜாஹிர் உசேன், ஜாபர் கனி, சாதிக் அலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

விழாவில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜமாஅத் அங்கத்தினர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Dinamlar News :

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=6164&Country_name=Gulf&cat=new

www.inneram.com News :

http://www.inneram.com/news/central-east-news/muduvai-sangamam-2011-at-dubai-1857.html

Facebook Photos :

http://www.facebook.com/media/set/?set=a.2954515541089.155166.1207444085&type=1&l=870586ac03

http://www.facebook.com/media/set/?set=a.2949404093306.155026.1207444085&type=1&l=e390e9aa3d

News

Read Previous

துபாய் முதுவை சங்கமம் 2011 : தலைமை இமாம் வாழ்த்து

Read Next

கவிதை பாடுவோம்

Leave a Reply

Your email address will not be published.