டிசம்பர் 20, துபாயில் முதுவை சங்கமம் 2013

Vinkmag ad

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடந்தோறும்  நடத்தப்பட்டு வரும் அமீரக வாழ் முதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘முதுவை சங்கமம்’ எனும் பெயரில் நடைபெற்றுவருகிறது.

முதுவை சங்கமம் 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி எதிர் வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் என 11.08.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சிங்கப்பூர் ஃபரிஹுல்லா, சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் முனைவர் கமால் நாசர், சென்னை கிளை ஜமாஅத் எஸ். ஜாஹிர் ஹுசைன், மதுரை கிளை ஜமாஅத் ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வில் அமீரகமெங்கும் வாழ்ந்து வரும் முதுவை மக்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு :
ஹெச் இப்னு சிக்கந்தர் : 050 69 44 128
ஹபிப் திவான் : 050 464 39 77
நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

News

Read Previous

மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர்

Read Next

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *