முதுவை ஹிதாயத்

Vinkmag ad

_DSC8021 47 20161229_092853 20170117_105402 20170521_191329

கா. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் –  முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத் – இவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிறந்தவர்.

ஆரம்பக் கல்வியை தற்போதைய விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அரசு ஆரம்பபள்ளியிலும், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியிலும் ஆரம்பம் மற்றும் உயர்நிலைக் கல்வியை படித்தார். மேல்நிலைக் கல்வியை அருப்புக்கோட்டை எஸ்பிகே மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார்.கல்லூரி

இளநிலை இயற்பியல் பட்டப்படிப்பை சிவகெங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியிலும், முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியிலும் படித்தார்.

பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரியில் படிக்கும் போதே பொதுநலப் பணிகளிலும், கட்டுரை, வினாடி – வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று கல்லூரி அளவிலும், மாவட்ட, மாநில அளவிலும் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளார்.

பொது நலப் பணிகளில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக நாட்டு நலப் பணித்திட்டத்தில் ஈடுபட்டு நாட்டுநலப்பணித்திட்ட முகாம்கள், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் , மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

கல்லூரியில் படிக்கும் போது பொதுமக்களுக்கு சேவை செய்யும்  நோக்கத்தில் நேரு இளைஞர் மையம் ஏற்படுத்தி அந்த அதன்  பொதுச் செயலாளராக   மேற்கொண்ட பணிகளுக்காக  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த சேவை அமைப்பு என்று பாராட்டும்  ரொக்கப்பரிசும் பெற்றிருக்கிறார்.

படிக்கும் போது   இதழியல்  மேல் ஆர்வம் தோன்றி  அது தொடர்பான படிப்புகளை அஞ்சல் வழியில் படித்து , . பத்திரிகைகள்,  செய்திகள், வாசகர் கடிதம் என பல்வேறு வகையான ஆக்கங்களையும் எழுதி வந்தார். மறுமலர்ச்சி வார இதழ்,  கருவூலம் மாத இதழ், மணிச்சுடர் நாளிதழ், சமரசம் மாதமிருமுறை இதழ் என பல்வேறு இதழ்களின் செய்தியாளராகவும் இருந்திருக்கிறார்.

இவர் துபாய் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தது 1998ல்.

வேலை நேரம் தவிர பிற நேரங்களில் ஈமான் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அனுபவத்தில்   தற்போது அதன்  மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளராக  பொறுப்பு  வகிக்கிறார்.

அந்த அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபீபுல்லா கான் வழிகாட்டுதலின் பேரில் அமீரகத்தில் எதிர்பாராத வகையில் இறக்கும் தமிழர்களின் உடல்களை இந்திய துணை தூதரகத்தின் ஒத்துழைப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு செல்வது, அமீரகத்திலேயே நல்லடக்கம் – அல்லது இறுதிச் சடங்கு – பல ஆண்டுகளாக எங்கு இருக்கிறார்கள் என அறியப்படாதவர்களை கண்டுபிடித்து குடும்பத்துடன் சேர்ப்பது – போன்ற  பல்வேறு பணிகளை செய்து வருவதால்  இந்திய துணை தூதரகத்தின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

இவரது சேவை துபாய் உள்ளிட்ட அமீரகத்தோடு நின்றுவிடாமல் , ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் எதிர்பாரமால் இறந்துவிடும் தமிழர்களுக்காக  அந்த நாட்டில் உள்ள சமூக நல அமைப்புகளை தொடர்பு கொண்டு  ஒருங்கிணைப்பினையும் செய்து வருகிறார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க அமைப்பிலும் செயல் படும் இவர்  சிறந்த முன்னாள் மாணவருக்கான விருதும் பெற்றிருக்கிறார்.

துபாய் உள்ளிட்ட வளைகுடா பகுதியில்  திறமை கொண்ட தமிழக மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவர பாடு படுகிறார்..

ஷார்ஜாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி குறித்த தகவல்களை  தமிழ் சமூகத்துக்கு  கொண்டு சேர்த்தல்: தமிழ் படைப்பள்ளிகளை ஊக்கப்படுத்தி  அவைகளை பத்திரிக்கைகள்  மற்றும்   சர்வதேச தமிழ் சமூகத்துக்கு சென்றடையக் கூடிய பணிகளையும் செய்து வருகிறார். இதற்காக மின்னஞ்சல் குழுமத்தையும் நடத்தி வருகிறார்.

பிரபல தமிழ் நாளிதழ்களின் செய்தியாளராகவும் இருந்து வருகிறார்.

அமீரகத்துக்கு வரும் பிரபலங்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை தமிழ் சமூகத்துக்கு பகிர்ந்து கொண்டு வருகிறார்.

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் சமூகத்துக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வருவதில் முக்கியமான பங்கினை வகித்து வருகிறார்.

இவரது தொடர்பு எண் : +971 50 5196433

மின்னஞ்சல் :  muduvaihidayath@gmail.com

20170523_214545 20171114_140513 20180902_153004 20190911_111200 20191104_205323 20191109_193722 20191115_174929 20191201_192123 20191212_222703 20191223_141100 20200110_162423 aa5 amb bihar1 bsa1 DSC_0228 DSC_0353 DSC_0421 DSC_0449 DSC_0470 DSC_0606 DSC_0646 DSC_0672 DSC_0821 DSC_0901 DSC_1031 DSC_1144 DSC_1162 DSC_2181 e gangai amaran HID imandeath1 IMG_2389 IMG_2969 IMG_3024 IMG_3051 IMG_3412 IMG_3505 IMG_3952 IMG_4428 IMG_5346 IMG_41371 IMG-20160826-WA0040 IMG-20171204-WA0020 IMG-20180706-WA0003 IMG-20180902-WA0065 IMG-20181014-WA0013 IMG-20181027-WA0012 IMG-20190203-WA0002 IMG-20190304-WA0025 IMG-20190712-WA0000 kmk m3 mh2 mh3 vipul nasa2 s5 sports st2 tamilachi 1 (2) x1 z1 z96

News

Read Previous

மரங்களுக்கு உண்டு மறுபிறவி

Read Next

உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *