மஸ்ஜிதுன்னபவி தொழக்கூடிய பள்ளி மட்டுமல்ல,பெருமானார்(ஸல்)வாழும் இடமுமாகும்!

Vinkmag ad
prophetமஸ்ஜிதுன்னபவி தொழக்கூடிய பள்ளி மட்டுமல்ல,பெருமானார்(ஸல்)வாழும் இடமுமாகும்!
                            (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

மஸ்ஜிதுன்னபவியின் பச்சை குப்பாவை இடிக்க வேண்டுமென்று தமிழகத்தில் அறியாமையின் வெளிப்பாடாக ஒருசிலர் மார்க்கம் பேசுகிறோம் என்ற பெயரில் உளறி வருபவர்களுக்கான பதிவே இது.

நபி(ஸல்)அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு மேலுள்ள பச்சை குப்பா வலிமார்களின் தர்ஹாவை போல இருப்பதால் அதை இடிக்க வேண்டுமென்று ஈமானை இழக்கும் வகையில் பேசித்திரிபவர்களே,கொஞ்சம் சிந்தியுங்கள்?

பெருமானார்(ஸல்)அவர்கள் நம்மை போன்று இறந்து மக்கி போக கூடியவர்கள் அல்ல,மறைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

ஒவ்வொரு நொடியும் (ஸல்)அவர்கள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் நமக்கு ஆதாரமாய் இருந்து வருவதை நினைவில் கொள்ளுங்கள்.

“யார் என் மீது சலாம் கூறினாலும் அல்லாஹ் என் உயிரை எனக்கு திருப்பி கொடுத்து விடுகிறான்.நான் அவரின் சலாத்திற்கு பதில் அளிப்பேன்”அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரலி),நூல்:அபுதாவூத்.
“என் மீது ஸலவாத் கூறுங்கள் நிச்சயமாக உங்களின் ஸலவாத் உலகில் நீங்கள் எங்கிருந்தாலும் என்னை வந்து சேருகிறது”(அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரலி),நூல்:அபுதாவூத்.
மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களின் ஆதாரத்தை அடிப்படையாக வைத்து நாம் சிந்திப்போமேயானால்…
உலகில் வாழும் முஃமினான,முஸ்லிமான மனிதர்கள் சொல்லி வரும் சலாமும்,சலவாத்தும் ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் நமது கண்மணி(ஸல்)அவர்களை சென்றடையும் போது அவர்களுக்கு ஏது இறப்பு?
இப்போது சொல்லுங்கள் மஸ்ஜிதுன்னபவி நமது நாயகம்(ஸல்)வாழ்ந்து வரும் வீடா?இல்லையா?பெருமானாரின் வீட்டிற்கு ஒரு அடையாளம் (பச்சை குப்பா) வேண்டுமா?வேண்டாமா?
என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ…அந்த ரப்புல் ஆலமீன் மீது ஆணையிட்டு கூறுகிறேன்.என் உயிர்,எனது பெற்றோர்,எனது மனைவி,பிள்ளை,எனது உறவுகள்,எனது வீடு வாசல்,சொத்து சுகம் இவையனைத்தையும் விட மேலாக கண்மணி (ஸல்)அவர்களையே நேசிக்கிறேன்.
ஸல்லல்லாஹு அலா முகம்மது,ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

News

Read Previous

கணவனும்…… மனைவியும்…… தாவாவும்…….

Read Next

பெங்களூரில் ஜெயகாந்தன் நினைவுக் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published.