“துஆக்கள்” என்ன இணைவைத்தலா?

Vinkmag ad
thu a“துஆக்கள்” என்ன இணைவைத்தலா?
                                     (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
இறைத்தூதர் பிறந்து வாழ்ந்த மண்ணில்,இறையச்சம் நீங்கியதோ?
மனிதனின் ஒவ்வொரு சொல்லிலும்,செயலிலும் அல்லாஹ்வின் எண்ணமும்,அச்சமும் இருக்க வேண்டுமென்று போதித்து,வழிகாட்டிய எம்பெருமானார் பிறந்து வாழ்ந்த அரபு மண்ணில் தற்போதைய மனிதர்களிடம் பெரும்பாலும் அத்தகைய இறையச்சம் காணமுடியவில்லையே?
மனிதன் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் கலப்படம்,வியாபாரத்தில் மோசடி.
தொழிலாளியின் வியர்வை உலர்வதற்கு முன் அவனது கூலியை கொடுத்து விடவேண்டுமென்ற அண்ணலாரின் அறநெறியை பின்பற்றாமை.
பெருமானாரால் அடிமைத்தனம் தகர்த்தெறியப்பட்ட அரபு மண்ணில் வெளிநாட்டு மோகம் என்ற வியாதியில் சிக்கிய பாவப்பட்ட தொழிலாளர்கள்,ஒட்டகம் மேய்க்கும் அடிமைகளாய்…
துஆ என்னும் நல்ல அமல்கள் சாகடிக்கப்பட்டதால் வந்த வினைகளோ? இவை.
ஐவேளை கடமையான தொழுகைக்கு பிறகும் கூட துஆ இல்லாத மனிதனிடம் இறையச்சம் கேள்விக்குறியே?
புனிதமான ரமலானில் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தில் நோன்பு திறக்கலாம் என்ற எனது நட்பு வட்டங்களின் அழைப்பை ஏற்று நானும் சென்றேன்.
நோன்பு திறக்க இன்னும் 10 நிமிடங்களே மீதமுள்ள நிலையில் ஒருவர் மைக் பிடிக்கிறார்.
துஆவுக்காகத்தான் என நினைத்து நானும் ஏமாந்து போனேன்.
மஃரிப் தொழுகைக்கு பிறகு கேள்வி,பதில் நிகழ்ச்சி நடக்கும். கலந்து கொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பாங்கின் சப்தம் கேட்டு நோன்பு திறக்கப்படுகிறது.
நோன்பு திறக்கும் முன் கேட்கப்படும் எனது அடியானின் துஆவை நான் பெரிதும் நேசிக்கிறேன் என்ற படைத்தவனின் வாக்குறுதியை நம்பாதவர்களா இவர்கள்?
துஆ என்ன இணைவைத்தலா?துஆக்கள் குறைந்ததால் தான் அரபுலக மண்ணில் நிம்மதி தொலைந்ததோ?
துஆக்களின் மீதான அவநம்பிக்கையால் பாலஸ்தீனத்து மக்களுக்கு கூட அது உதவாமல் போய்விட்டதே?
நம்பிக்கையுடைய துஆவில் மட்டுமே அல்லாஹ்வின் அருளை பெறமுடியும் என்ற எண்ணத்தில் துஆ செய்யுங்கள்.பாலஸ்தீனத்து மக்கள் நன்மை பெறட்டும் இன்ஷா அல்லாஹ்…….

News

Read Previous

மனம் போன போக்கிலே மங்கையர் வாழலாமா?

Read Next

இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *