தண்ணீர்

Vinkmag ad

தண்ணீர்_ சிறுகதை

“ராமசாமி…,ராமசாமி .., மாத்தூர் டேமில..,தண்ணீர் திறந்து விடுறாங்களாம்.”

“ஆத்துல..,  தண்ணீர் வரப்போகுது. பயிர்களெல்லாம் வாடிப்போய் கிடக்குது. முதல் தண்ணியை..,நம்ம வயல்களுக்கு திருப்பி விடலாம். சீக்கிரம் வா…!!”    “மேலத்தெரு  மாடசாமி சொல்ல.., ராமசாமி துள்ளி குதித்து எழுந்தான்.!!

எத்தனை நாள் கனவு…?? அரசாங்கத்துக்கு மனு கொடுத்தது வீணா போகல்ல ..,மனது லேசாக பறந்தது ராமசாமிக்கு..!!

அவசரமாய் மனைவி மல்லிகா எடுத்து வைத்த.., கஞ்சியையும்.., ஆவக்காய் ஊறுகாயும்.,அவசரமாக வயிற்றுக்கு வார்த்தான்.

மண் வெட்டியை தோளில் சாய்த்து.., மாடசாமியுடன் வயலுக்கு விரைந்தான் ராமசாமி.

ஆற்றில் வெள்ளம் அலை புரண்டோடி  வந்தது.நுரை பொங்கும் தண்ணீரில்,சோர்ந்து கிடந்த நெத்திலி மீன்களும்..,கெண்டை மீன்களும் வெள்ளி உருகலாய் குதித்தாடின. பறவைகள் தாழ்வாக பறந்து தண்ணீர் பரப்புகளில் இறங்க ஆரம்பித்தன. மீன் கொத்திகளும்..,கொக்குகளும்., தாவி விழுந்த மீன்களை லாவகமாக கொத்தின..

குழந்தைகள் கும்மாளமாக தண்ணீரில் குதித்தார்கள். சில குழந்தைகள் மண் புழுக்களை.., தூண்டில் வாயில் வைத்து, மீன் பிடிக்க தயாரானார்கள். வாடிக் கிடந்த., அல்லிக்கொடிகளும்,தாமரைத் தண்டுகளும் தண்ணீரை தான் தண்டுகளில் சேமிக்க துவங்கின.

மரங்களின் வேர் பகுதியில் தண்ணீர் தழுவ..,குளுமையில் சிலிர்த்தன மரங்கள். தண்ணீர் கிளை வாய்க்கால்களில்.., பாய்ந்து  ஓடியது.!

வயலின் வரப்புகளை வெட்டி.., தான் வயல்களுக்கு தண்ணீர் பாய விட்டான் ராமசாமி.பயிர்கள் சின்ன சிணுங்கலோடு..,அசைந்து ஆடியது. ராமசாமியின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த தண்ணீரை பார்த்து எவ்வளவு நாளாச்சி..?? இன்னும் இரு மாதங்களில் கதிர்கள் வந்து விடும்.பின் கதிர்களை  மாடுகள் வைத்து, நெல்மணிகளை களைந்து.., பத்தாயத்தில் தட்டி போடணும்.இனி வயிற்றுக்கு பஞ்சம் இல்லை. கொஞ்சம் நெல்மணிகளை விதை நெல்லுக்கும்., இரண்டு மரைக்கால் நெல் மாடசாமிக்கும் கொடுக்கவேண்டும். சந்தோஷத்தில் ஆடும் பயிர்களை பார்த்து சிரிக்க தொடங்கினான்.

“” என்னங்க.., என்னங்க.. சீக்கிரம் எழும்புங்க..,,மல்லிகா தான் அவனை எழுப்பி கொண்டிருந்தாள். சிமென்ட்பேக்டரியில்.., ஜல்லி வந்து இறங்கி இருக்காம்.!! சீக்கிரம் போங்க.., மல்லிகாவின் கத்தலில் முழித்து பார்த்தான். பாயில் இருந்து விழித்தான்.!!

“”என்ன இது..,  .நான் கண்டது கனவா…?? கண்ணை கசக்கி  மெல்ல எழுந்தான்.

“” மாடசாமி  அண்ணன் காத்திட்டு இருக்கார். சீக்கிரம் பேக்டரிக்கு  போங்க.! என்றவள் பல் தேய்த்து வந்தவனிடம் அந்த, தண்ணீர் பாட்டிலையும் ..கஞ்சி  வாளியையும் நீட்டினாள். தண்ணீர் குடிக்காம நிக்காதீங்க. என்ன …,என்ன நோய்களோ வருது.. என்றாள்”””

தண்ணீர் பாட்டிலை வாங்கியவன்.., அதை உற்று நோக்கினான். தண்ணீர் தடுமாற்றமாய் உள்ளே அலம்பியது.!! பாட்டிலை தோள் பையில் வைத்தவன்..,பேக்டரியை நோக்கி…,  பொடி  நடையாய்  நடக்க ஆரம்பித்தான் மாடசாமியோடு…!!

உமா நாராயண்.

குமரி உத்ரா ,துபாய்.

 

News

Read Previous

துபாயில் இலவச பல் மருத்துவ முகாம்

Read Next

பாடு மனமே பாடு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *