கனா!

Vinkmag ad

சிறுகதை

 

அலுவலகத்தில் அன்று வரதனுக்கு இறுதிநாள். இன்னும் சில நாட்களில் துபாயில் வேலைக்குசேரவிருக்கிறான்கல்யாணமாகி இரண்டு வருடத்திற்கு பிறகு குழந்தை பிறந்து நாலு மாதம் தான்ஆகிறதுமனைவியையும்மகனையும் பிரிந்து செல்ல அவனுக்கு மனசு இல்லைஆனால் என்ன செய்வது வாங்குற சம்பளம்,தங்குறதுக்கும்தின்கிறதுக்குமே சரியாய் இருந்ததுஇப்பொழுது மகன் பிறந்திருக்கிறான்இனியும் இப்படி சமாளிக்கமுடியாதுஅவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும்நிறைய படிக்க வைக்கணும் அதுக்கு பணம் வேணுமேஇன்றையதேதியில் ஒரு குழந்தையை படிக்கவைக்க பெற்றோர் இருவரும் வேலைக்கு போனால் தானே சமாளிக்கமுடிகிறது.

 

ஒருவழியாய் துபாய்க்கு ஆள் எடுக்கும் ஒரு கம்பெனியில் லட்ச ரூபாய்  பணத்தைக் கட்டி  வேலையும் உறுதியாகி விட்டதுவெளிநாடு போய் சம்பாதித்து விரைவிலேயே வாங்கிய கடனை அடைத்திவிடலாம்சிறிது காலம் வேலை பார்த்து சிறுகச்சிறுக சம்பாதித்து ஒரு வீட்டைக் கட்டிவிட்டு ஊரிலேயே ஒரு தொழிலை தொடங்கினால் அப்படியே காலம் ஓடிவிடும் எனபெரும்பாலானோர் போல வரதனும் விமானத்தில் கனாக் கண்டுகொண்டே துபாய்க்கு பயணித்தான்.

 

விமானத்தில் ஏறியதிலிருந்து, விமான நிலையத்தில் அழுகையோடு வழியனுப்பி வைத்த மனைவியின் முகமும், கட்டிக்கொண்டு விடமாட்டேன் என்று அழுது அடம்பிடித்த மகனின் முகமும், விமானத்தில் வரதனைப் போன்றே புது உலகைத்தேடி  உடன் பயணித்த பயணியரின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியைக் கண்டதும் கொஞ்சம் மறைந்து தான்போயிற்று.  துபாயில் இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்கப் போகிறோம் என்று விமானத்தில் அறிவிப்பு வருகிறதுசன்னலோரம் எட்டிப் பார்த்து இந்தப் பாலைவனத்தில் என் சோலைவனம் எங்கோ இருக்கிறது என்று சிறியதாய்த் தெரிந்தகட்டிடங்களை பார்த்துக்கொண்டே புதிய வாழ்கையை தேடுகிறான்.

 

துபாயில் தரையிறங்கியதும் குடியேற்ற உரிமை சரிபார்க்கப்பட்டு கொண்டுவந்த பெட்டியை தூக்கிக் கொண்டு வாயிலுக்கு வர வரதனை அழைத்துச் செல்ல அலுவலக ஆள் ஏற்கனவே வந்து காத்திருந்து சிரித்த முகத்துடன் வரவேற்று தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்று வரதனின் படுக்கையை காட்டி, இதுதான் உங்கள் படுக்கை சற்று ஓய்வெடுங்கள் நாளை முதல் வேலைக்கு செல்லலாம் என்று சொல்லி சென்றுவிட்டார். புதிய ஊர், புதிய மக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தது, நாளை புதிய வேலையில் சேர்ந்து நன்கு உழைத்து பொருளீட்டி, மனைவி மகனுடன் இனி வாழ்க்கையில் எந்தக் கவலையுமே இல்லை என்று நிம்மதியாய் உறங்கிப்போனான்.  பொழுது விடிந்துவேலையில் சேர்ந்துபுதிய நண்பர்கள் அறிமுகம்கிடைத்து மாலை அறைக்கு வந்ததும் ஒன்று விடாமல் மனைவிக்கு தொலைபேசியில் சொல்லி மகனின் குரலைக்கேட்டு பிரிவுவருத்தினாலும் இனி வரப்போகும் வாழ்கையை எண்ணி நன்கு தூங்கிப்போனான்.

 

புதிய வாழ்கை வரதனுக்கு விரைவிலேயே பழக்கத்திற்கு வந்துவிட்டது. காலையில் வேலைக்கு செல்வது, மாலையில் மனைவியுடன் தொலைபேசியில் பேசுவது, விடுமுறை நாட்களில் ஊரைச்சுற்றிப் பார்ப்பது, மாத மாதம் வீட்டிற்கு தேவையான பணம் அனுப்புவது என்று அவன் நினைத்த வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்தது. அலுவலகத்தில் எந்த இடையூறு வந்தாலும் வீட்டில் இருக்கும் மனைவி, மகனை நினைத்து அலுக்காமல் வேலை செய்து பொருளீட்டினான் வரதன். நாட்கள் விரைவாகவே சென்றது. ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை 45 நாட்கள் அலுவலகத்தில் விடுப்பு தருவார்கள்சம்பளமும் தந்துபோய்வர விமான பயணச்சீட்டு தந்து அனுப்பிவைப்பார்கள்.

 

விடுமுறைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கும் பொழுதே வரதனுக்கு பயணத்திற்கான ஏற்பாடுகள் அலுவலகத்தில் துவங்கிவிட்டார்கள். தேதியைக் குறித்து கொடுத்து   விமான பயணச்சீட்டும் முன்பதிவும் செய்துதந்துவிட்டார்கள்வரதனுக்குதலைகால் புரியவில்லைநீண்ட நெடுநாளைக்கு பிறகு பிரிந்து வந்த மனைவியையும் மகனையும் காணப் போகிறோம் என்றஇன்பம் மனதில் குடிகொண்டு அவனை திக்கு முக்கு ஆடச் செய்ததுஅறைக்கு வந்ததும் மனைவியிடம் சொல்லிவீட்டில்பெற்றோருக்கு சொல்லிநன்கு மழலை பேசும் மகனிடம் சொல்லி மகிழ்ச்சி வயப்பட்டுப் போனான்.

 

அலுவலகத்தில் வேலை ஓடவில்லை ஒன்பது மாதங்கள் சட்டென ஓடிவிட்டது இந்த மூன்று மாத காத்திருப்பு இழுத்தடித்தது வரதனுக்கு. நாட்களை எண்ணினான். பயணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது. வரதனுக்கு எதுவும் பிடிக்கவில்லை. மனைவி மகனுடன் ஊர் சுற்ற வேண்டும், சினிமா விற்கு போக வேண்டும், மகனுடம் நிறைய விளையாட வென்றும் என்று தன ஆசைகளை தினமும் மனைவியிடம் சொல்லி அசைகளை அடுக்கிக் கொண்டே போனான்.  மனைவிமகனுக்கு விளையாட்டுப் பொருள்கள்புத்தாடைகள் என தேடித் தேடி வாங்கி சேகரித்தான்.

 

 

அந்த நாளும் வந்தது. விமானத்தில் ஏறி வீடிற்கு செல்லத் தயாரானான். ஊருக்கும் விமான நிலைத்திற்கும் தொலைவு அதிகமாய் இருந்ததால் வீட்டில் இருந்து யாரும் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு நண்பரிடம் சொல்லி வாடகைக்கு கார் சொல்லிவைத்திருந்தான். அதிகாலை விமானம் விட்டிறங்கி வீட்டுக்கு சென்று சேர்வதற்குள் மணி எட்டு அடித்தது. வாசலில் நின்று வீட்டுக்கதவை தட்ட தவழ்ந்து திரிந்து கொண்டிருந்த மகன், ஓடி வருவது  நன்கு தெரிந்ததுவந்த மகன்அம்மாயாரோ மாமா வந்துருக்காங்க என்றான்தலையில் இடிவிழுந்தது வரதனுக்கு.

News

Read Previous

மணமகள் தேவை

Read Next

சார்ஜாவில் இலவச மருத்துவ முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *