குறுஞ் சிந்தனை

Vinkmag ad

யாரெல்லாம்
நம்மோடு இருப்பார்கள்,
விலகுவார்கள் என்று
காலம் முடிவு செய்வதில்லை.

அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான்
முடிவு செய்கிறது.

வாய் தவறி விழும் பேச்சுக்கள்.
கை தவறி விழும் கண்ணாடியை
விட கூர்மையானது.

யாரிடம் பேசுகிறோம்
என்பதை விட
என்ன பேசுகிறோம்
என்பதை அறிந்து
கொண்டு பேசுங்கள்.

நிம்மதியுடன் வாழ்கிறேன்
என யாராலும் எளிதில்
சொல்லப் படுவதில்லை.

வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும்
தந்து விடுவதில்லை.

மற்றவர் தவறைக் கவனித்துக்
கொண்டே இருப்பவர்கள்.
தன் தவறுகளை வளர்த்துக்
கொண்டே இருக்கிறார்கள்.

பணம் இருந்தால்
நீங்கள்  உயர்ந்தவன்
குணம் இருந்தால்
நீங்கள் குப்பை.

நடித்தால் நீங்கள் நல்லவன்.
உண்மை பேசினால்
பைத்தியக்காரன்.

அன்பு காட்டினால் ஏமாளி.
எடுத்துச் சொன்னால் கோமாளி.

நிலவை….
தூரத்தில் இருந்து
ரசிப்பதை போல.

சில உறவுகளையும்…..
தூரத்திலிருந்து ரசிக்க
கற்றுக்கொள்ள வேண்டும்.

சில வலிகள்
இல்லாமல் இருக்கலாம்.

தன்னுடைய செயலும்
தன்னுடைய வார்த்தைகளும்
மட்டும்தான் சரியன்று
வாதாடுபவர்கள் மத்தியில்
அமைதி மட்டும் உங்கள்
ஆயுதமாக வைத்துக்
கொள்ளுங்கள்.

அவர்களுக்கு புரியவைக்க
வரும் காலம் ஒன்று உள்ளது.

சிந்தித்து செயல்படுங்கள்.
இதுவும் கடந்து போகும்
அல்லது இதுவும் பழகி போகும்.

நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.

ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை
கற்று தரவே வருகின்றது.

யாரும் உங்கள்
கண்ணீரை பார்ப்பதில்லை.

யாரும் உங்கள்
கவலைகளை பார்ப்பதில்லை.

யாரும் உங்கள்
வலிகளை பார்ப்பதில்லை.

ஆனால்
எல்லோரும் உங்கள்
தவறை மட்டும் பார்ப்பார்கள்.

மனிதனும் வாழை மரமும்
ஒன்று தான்.

தேவைப்படும் வரை
வைத்திருப்பார்கள்.

தேவை முடிந்தவுடன்
வெட்டி வீசி விடுவார்கள்.

News

Read Previous

இந்திய அரசின் புதிய முதலீட்டுக் கொள்கையால் மூடப்பட்ட அமெரிக்க ஊடகம்!

Read Next

கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாயக் கல்லூரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *