ஒரு நிமிடக் கதை

Vinkmag ad

ஒரு நிமிடக் கதை: உண(ர்)வு

‘‘கெஸ்ட்டுக்கு ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் வாங்கி வைக்கச் சொல்லிட்டு, இப்ப ஏதோ அவசர வேலை.. வரமுடியலைன்னு மேனேஜர் சொல்லிட்டார்டி. இப்ப என்ன பண்றது சுமி..? ’’ – ரம்யா அங்கலாய்க்க…

‘‘அடடா, வழக்கமா வீட்ல இருந்து அடைச் சுக் கொண்டு வந்ததை நாமளும் இப்பத்தானே கொட்டிக்கிட்டோம்! ச்சே…வடை போச்சே..!’’ என வடிவேலு குரலில் புலம்பிய சுமி, ‘‘ஹூம்… நம்ம கவுரிக்குதான் கொடுப்பினை! கூப்பிட்டு கொடுத்திடு’’ என்றாள்.

உடனே கவுரியை அழைத்து விஷயத்தைச் சொன்னாள் ரம்யா.

‘‘அடடா, இப்பதான் சாப்பிட்டேன்மா! வேணா நம்ம வாட்ச்மேனுக்கு கொடுத்திடலாம்மா’’ என கவுரி சொல்ல…

‘‘சரி… அவரை வரச் சொல்லுங்க’’ என்றாள் ரம்யா.

* * *

‘‘என்ன ரம்யா! கவுரியம்மா சாப்டாச் சுன்னு சொன்னியே. அவங்க இப்பதான் சாப் பிட்டுட்டு இருக்காங்க. வலியப் போயி சாப்பாடு கொடுத்தா இவங்களுக்கெல்லாம் எளக்கார மாத்தான் இருக்கும்’’ என சுமி சூடேற்ற, கொதித்துப் போனாள் ரம்யா. உடனே கவுரியை அழைத்துக் கேட்டாள்.

‘‘மன்னிச்சிடுங்கம்மா! ஒருநாள் வாய்க்கு ருசி பழகிட்டா, இந்த மோசமான நாக்கு நாளைக் கும் இதையே கேக்கும். ஹோட்டல் சாப்பாட்டை யார் வேணாலும் சாப்பிடுவாங்க. ஆனா நான் கொண்டுவந்ததை யாரும்மா சாப்பிடு வாங்க? அதுவும் இல்லாம, ‘எனக்கு வேண்டாம்’னா உங்க மனசு சங்கடப்படும். அதான்.. நான்..’’ என தயங்கித் தயங்கி சொன்ன கவுரியின் உணர்வில் ஸ்டார் ஹோட்டல் விருந்துண்டதாய் பூரித்துப் போனாள் ரம்யா!

News

Read Previous

இன்குலாப்

Read Next

கவிதைத் தொகுப்பு…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *