இஸ்லாத்தை மதம் என்று குறிப்பிடலாமா ?

Vinkmag ad

இஸ்லாம் ஓர் மார்க்கம்

jamal1278@gmail.com

ஜமால் முஹைதீன், திண்டுக்கல்

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்

 

தமிழில் மதம் என்னும் சொல் கடவுளை நம்புவது ,வணங்குவது மற்றும் சுக துக்க காரியங்களில் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் செய்வது ஆகியவற்றுக்குத்தான் மக்களால் பயன் படுத்தப் படுகிறது.அவ்வாறே புரிந்துக் கொள்ளவும் படுகிறது.

இஸ்லாமும் பெரும்பாலும் மதம் என்றே பலராலும் தவறாக புரிந்துக் கொள்ளப் படுகிறது.அவ்வாறே பேசவும் படுகிறது. பொதுவாக கடவுளை நம்புவதால் மற்ற மதங்களுடன் இதனையும் மதம் என்றே ஒப்பிட்டு பேசப் பட்டாலும் அவ்வார்த்தை சற்றும் இஸ்லாமிற்கு பொறுத்தமானதல்ல.இஸ்லாம் “தீன்“ என்ற அரபி வார்த்தையால் குறிக்கப்படுகிறது “தீன்“ என்னும் “அரபி” வார்த்தைக்கு “மார்க்கம்” என்ற தமிழ் வார்த்தையே சரியான பொருளாகும் .குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த அறிஞர் பெருமக்கள் தீன் என்ற வார்த்தைக்கு தமிழில் மதம் என்று  அல்ல, மார்க்கம் என்றே மொழி பெயர்த்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக எந்தப் பிள்ளையாக இருந்தாலும் அதன் பெற்றோர் இட்டப் பெயரே அதன் மூல பெயராக கொள்ளப் படும் மற்றும் ஆவணங்களிலும் பதியப் படும்.இதுதான் நீதியும் உலக நியதியும் ஆகும்.எனவே இஸ்லாம்  மார்க்கம் என்று முஸ்லிம் சமூகம் கொள்ளும் பொருளிலேயே அது அழைக்கப் பட வேண்டும்

“மார்க்கம்” என்பது வாழ்க்கை வழிமுறைகளை உள்ளடக்கியது. மதம் என்பது  சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உள்ளடக்கியது இஸ்லாம் ஒரே இறைவனை நம்பிக்கை கொள்வது,அவனை வணங்குவது குறித்து மட்டும் பேச வில்லை.மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொடுக்கிறது உதாரணமாக பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள,கணவன்,மனைவி மக்கள்  ,சகோதரர்கள்,சகோதரிகள்ஆகியோர் அவரவருக்கு  செய்ய வேண்டிய கடமைகள்,மற்றும் அனைத்து மக்களின் உரிமைகள், மனிதனின்  அன்றாட வாழ்வியல் முறையான உண்பது ,குடிப்பது, இயற்கை தேவைகளான மலம் ஜலம் கழிப்பது, நடப்பது, பேசுவது போன்ற செயல் பாடுகளின் ஒழுங்குமுறைகள், மற்றும் சொத்து பிரிப்பு ,திருமணம், குடும்ப வாழ்க்கை,குழந்தை வளர்ப்பு,கடன் ,கொடுக்கல் வாங்கல் , வியாபாரம் ஆகியன குறித்த நெறி முறைகள்.என இஸ்லாம்  மனித வாழ்வு குறித்து பேசாத விஷயங்கள் எதுவுமில்லை.

சடங்குகள் செய்ய மட்டுமே பயன்படுத்தப் படும் மதம் என்ற வார்த்தை, மனித குலத்திற்கு நலன் பயக்க அழகிய சட்டங்கள் கொண்ட இஸ்லாமிற்கு பொருந்தாது.எனவே மார்க்கம் என்ற வார்த்தையே அதற்க்கு தெளிவான பொருளாகும்.எனவே இஸ்லாம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள் அதன் அறிஞர் பெருமக்கள் என்ன வார்த்தைக் கொண்டு அழைக்கின்றனரோ அவ்வாறு அழைப்பதே சரியானதும் நியாயமான கருத்தும் ஆகும். பின்பற்றப் படுவது இஸ்லாம் மார்க்கம் என்றும் பின்பற்றும் மக்கள் முஸ்லிம்கள் என்றும் அழைக்கப் படவேண்டும் , இறைவனிடம் ஏற்கப் பட்ட மார்க்கம் இஸ்லாம் , மற்றும் நாங்கள் முஸ்லிம்களில் இருந்துஉள்ளவன் என்ற நீர் சொல்வீராக என்ற அருள்மறை குர்ஆன் வசனங்கள் இந்த கருத்தை உறுதிப் படுத்துகின்றன.

முஸ்லிம் மதம் என்ற  தவறான சொல்லாக்கம் ஊடக உலகில் தவிர்க்கப் பட்டு இஸ்லாம் மார்க்கம் என்ற சொல் அதற்குப் பதில் பயன் படுத்தப் பட வேண்டும். இஸ்லாமியர் என்ற சொல் தவிர்க்கப் பட்டு முஸ்லிம் என்ற சொல் பயன்படுத்தப் பட வேண்டும் என்பது மேற்க் குறிப்பிடப் பட்ட எமது கருத்துக்களில் இருந்து அறிவுலகிற்கு நாம் எடுத்து வைக்கும் கோரிக்கையாகும்.

News

Read Previous

இந்தியும் இந்தியாவும்..

Read Next

இஸ்லாம் ஓர் மார்க்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *