இஸ்லாத்தின்_பார்வையில் #RIP

Vinkmag ad

#இஸ்லாத்தின்_பார்வையில் #RIP
#Rest_In_Peace)

#பைபிளிலிருந்து_வந்ததே RIP(Rest In Peace) என்ற வார்த்தை.

ஒரு மனிதர் இறந்துவிட்டால் இன்று பல முஸ்லிம்களின் வார்த்தை , RIP(Rest In Peace). RIP – ன் அர்த்தம் “பிரிந்த ஆத்மா சாந்தியடையட்டும்” என்பதாகும்.

சரி இது எங்கிருந்து வந்தது என்றால் , கிருஸ்துவர்களிடமிருந்து வந்ததாகும்.

பைபிளில் , #ஏசாயா 57 : #வசனம் 2 ல் ,

“நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்”

என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வசனத்தைதான் கல்லறைகளில் RIP என்று அவர்கள் எழுதிவைக்கின்றனர்.

ஆகவே பிற மதத்தினுடைய பயன்பாட்டை ஒரு முஸ்லிம் எப்படி பயன்படுத்துவான் ? கண்டிப்பாக இதை பயன்படுத்துவது கூடாது.

மேலும் , இஸ்லாத்திற்கும் அந்த வார்த்தைக்கும் என்ன சம்மந்தம் ? நபிகளார் பயன்படுத்தினார்களா ? அல்லது குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு முரணில்லாமல் உள்ளதா ?

#அமைதியான_உறக்கமா ?

ஒரு மனிதன் இறந்தபின் அவன் அமைதியாக உறங்குகிறானா அல்லது அங்கு வேதனை செய்யப்படுகிறானா என்பதை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தாலே தவிர நமக்கு தெரியாது.

அறிவித்து கொடுக்க வஹி இன்றளவும் வருமா என்றால் வரவே வராது என்று நாம் உறுதியாகக் கூறலாம். பிறகு எப்படி கப்ரில் உள்ளவர் அமைதியாக உறங்குகிறார் என்று நாம் கூற முடியும் ?

முதல் அடிப்படையே தவறாக அமைந்துவிட்டது.

நபிகளாரின் காலத்தில் இதை கண்டித்து பல செய்திகளும் உள்ளன.

حدثني زهير بن حرب حدثنا جرير عن العلاء بن المسيب عن فضيل بن عمرو عن عائشة بنت طلحة عن عائشة أم المؤمنين قالت توفي صبي فقلت طوبى له عصفور من عصافير الجنة فقال رسول الله صلى الله عليه وسلم: ((أولا تدرين أن الله خلق الجنة وخلق النار فخلق لهذه أهلا ولهذه أهلا)).

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) ஒரு குழந்தை இறந்துபோனது. அப்போது நான், “அதற்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக்குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்குத் தெரியாதா? அல்லாஹ் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தபோதே, அதற்கெனச் சிலரையும் இதற்கெனச் சிலரையும் படைத்துவிட்டான்” என்று சொன்னார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5174
அத்தியாயம் : 46. (தலை)விதி

حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا وكيع عن طلحة بن يحيى عن عمته عائشة بنت طلحة عن عائشة أم المؤمنين قالت دعي رسول الله صلى الله عليه وسلم إلى جنازة صبي من الأنصار فقلت يا رسول الله طوبى لهذا عصفور من عصافير الجنة لم يعمل السوء ولم يدركه قال: ((أوغير ذلك يا عائشة إن الله خلق للجنة أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم وخلق للنار أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم)).

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்தபோது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை” என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்” என்று கூறினார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5175
அத்தியாயம் : 46. (தலை)விதி

பல ஹதீஸ்கள் இருப்பினும் இவ்விரண்டே போதுமானதாகும்.

மேற்கூறப்பட்ட இரு ஹதீஸ்களுமே நமக்கு மிகச்சிறந்த உதாரணம்.

ஒரு குழந்தை இறந்தபின் ஆயிஷா(ரலி) அவர்கள் , சொர்க்கத்தின் சிட்டுக்குருவிகளில் ஒன்று என்றும் அந்த குழந்தை எந்த தவறும் செய்யவில்லை என்றும் தவறு செய்வதற்குண்டான பருவத்தையும் அடையவில்லை என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் நபிகளார் அதை கண்டிக்கிறார்கள்.

குழந்தையாக இருப்பினும் அது சொர்க்கமா நரகமா என்பதெல்லாம் நாம் தீர்மானிக்க முடியாது , தீர்மானிக்கக் கூடாது என்கிறார்கள்.

இப்படியிருக்க இஸ்லாத்தை ஏற்காத , இன்னும் சொல்வதாக இருந்தால் இறைநம்பிக்கையில்லாத ஒருவரைப் பார்த்து அவர் அமைதியாக உறங்குகிறார் என்பதும் மார்க்கத்திற்கு எதிரான செயால்பாடே !

ஒரு மனிதன் இறந்தால் என்ன கூறுவது ?

கடந்த இரு தொடர்களில் #RIP(Rest In Peace) கூறுவது கூடாது , அது கிருஸ்துவர்களின் வழக்கம் , ஒரு மனிதன் இறந்தால் அவன் அமைதியாக உறங்குகிறானா இல்லையா என்பது யாருக்கும் தெரியாத விசயம் என்பதைப் பார்த்தோம்.

சரி ஒரு முஸ்லிம் இறந்தாலும் அல்லது முஸ்லிமல்லாதவர்கள் இறந்தாலும் நாம் என்ன கூறவேண்டும் ?

எல்லாவற்றிற்கும் இஸ்லாத்தில் பதில் உள்ளதுபோல இதற்கும் இஸ்லாம் தெளிவாக பதில் சொல்லுகிறது.

ஒரு மனிதனின் இறப்பிற்கு மட்டுமல்ல , ஒரு முஸ்லிமிற்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் கூட அவன் என்ன கூறவேண்டும் என்பதை குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏

மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன் : 2:155)

மேற்கூறிய வசனத்தில் மனிதனுக்கு பலவிதங்களில் சோதனைகளை அல்லாஹ் தருகின்றான்.

الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ‏

அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:156)

ஆனால் எத்தைகைய சோதனைகளை எதிர்கொண்டாலும் ஒரு முஸ்லிமின் வார்த்தை “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்) என்பதாகவே இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக மார்க்கத்திற்கு முரணான எந்த வார்த்தைகளையும் கூறுவது கூடாது.

மேலும் அல்லாஹ் கூறுகிறான் ,

اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ‏

அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்!
(அல்குர்ஆன் : 2:157)

என்கிறான்.

இப்படி கூறக்கூடியவர்களுக்குதான் அல்லாஹ்விடமிருந்து நல்வாழ்த்துக்களும் , நல்லருளும் உண்டாகும் என்கிறான்.

எனவே பிற மதத்தின் வார்த்தைகளையோ , மார்க்கத்திற்கு முரணான வார்த்தைகளையோப் பயன்படுத்தாமல் நம்முடைய மார்க்கம் நமக்கு தெளிவாகக் கூறியிருக்கும் வார்த்தையை மட்டுமே பயன்படுத்துவோம்.

News

Read Previous

”எளிமை என்பது ஏழ்மை அல்ல…!”

Read Next

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Leave a Reply

Your email address will not be published.