இந்திய வானம்!

Vinkmag ad

இந்திய வானம்-எஸ்.ராமகிருஷ்ணன்
நூல் பெயர்:
இந்திய வானம்!

நூலாசிரியர்:
எஸ்.ராமகிருஷ்ணன்

நூல் குறிப்பு:
பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல… அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும், புதைந்துபோகும் குண நலன்களையும் மீண்டும் துளிர்த்தெழச் செய்வதாக அமைகிறது. ஆக்கப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் நிறைந்து தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னேற்றங்கண்டு, உலக மயமாக்கலால் வையம் உருமாறி ஏற்றங்கண்டிருந்தாலும், அவற்றுள் இன்னும் மாறாமல் மூலைமுடுக்குகளில் சிக்கியிருக்கும் மனித மாசுக்களின் மீது விழும் எஸ்.ராமகிருஷ்ணனின் பார்வை இந்திய வானில் உலவுகிறது. தனி ஒரு மனிதனின் இடைவிடாத உழைப்பு… பொதுமக்களின் மீதான நம்பிக்கை… சமூகத்தின் மீதான அக்கறை… இந்திய மண்ணின்மீது கொண்ட நேசம்… கிராமத்து வாசிகளின் சுவாசம் ஏக்கத்துடன் நகரத்து காற்றில் கலக்கும் சோகத்தையும் – சென்னையின் இருண்ட காலத்தில் ஒளிந்திருந்த ஈர நெஞ்சங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர். இன்று மாற்றமடைந்த கல்வியின் நிலைமையும், சீரடைய வேண்டிய கல்வி சார்ந்த அமைப்புகளின் அவலங்களையும் சுட்டிக்காட்டியிருப்பதோடு, பெண் சிசு மீதான தீய பார்வை நீங்கும் என்கிற நம்பிக்கையையும், பெண் குழந்தை பிறந்தால் மரம் நடும் மரபையும் ஒரு பசுமை கிராமம் வழியாக உணர்த்தியிருப்பதும் அற்புதம். ஆனந்த விகடனில் தொடராக பயணித்த ‘இந்திய வானம்’ இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டவும் பயண சுவாரஸ்யங்களுடன் பயணிக்கவும் தயாராகுங்கள்.

ஆனந்தவிகடன் இதழ் மூலம் பல லட்சக்கணக்கானவர்களைச் சென்றடைந்த தொடர் இப்போது நூல் வடிவில்.

நூல் வகை:
பொது நிகழ்வுகள் வகையை சார்ந்தது.

பதிப்பகம்:
விகடன் பிரசுரம்.

வருடம்: 13/08/2015 – 18/02/2016

பக்கங்கள்: 216

News

Read Previous

கணையம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Read Next

என்றென்றும் அணையா விளக்கு

Leave a Reply

Your email address will not be published.