ஆசிரியர் திரு முகமது லுக்மன் ஹக்கீம் அவர்கள் ……..

Vinkmag ad

ஆசிரியர் திரு முகமது
லுக்மன் ஹக்கீம் அவர்கள்
—————————-

எட்டாம் வகுப்பை கிராம பள்ளியில் முடித்து ஒன்பதாம் வகுப்பு முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன்.

கிராம சூழலிலே வளரந்த எனக்கு நகரம் புது அனுபவமாக இருந்தது.

ஒன்பதாம் வகுப்பு டி பிரிவு. எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு லுக்மன் ஹக்கீம் அவர்கள். அவர் வகுப்பெடுத்தார் என்றால் வகுப்பில் சிரிப்பொலி சத்தம் தான் பிரதானம்.

கடினமான பாடங்களை உதராணங்களோடு எளிமையாக்கி கூறுவதில் வல்லவர். என்னைக்கவர்ந்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர். மாணவர்களின் மனம் கவர்ந்த நாயகன் அவர்.

ஒரு ஊர்ல என கதையாகவே பாடத்தைதுவங்குவார்.
அதனால் மாணவர்களின் கவனம் அவரை நோக்கியே இருக்கும்.

மாணவர்களை ஊக்குவிப்பதில்
திரு லுக்மன் சார் சிறந்தவர்.

ஆகச்சிறந்த உழைப்பாளி அவர். பள்ளி வேலை நேரம் போக இதர நேரங்களில் தான் ஒரு முதுநிலை பட்டாதாரி ஆசிரியர் என்ற செருக்கு இல்லாமல் சாதரணமாக ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பது அவரின் தனிப்பட்ட பெருமை.

காலாண்டுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கு ஹீரோ பேனா என் சொந்த செலவில் பரிசளிப்பேன் என அறிவித்தார்.

அந்தப்பள்ளியிலே ஆரம்பம் முதல் படித்துவரும் ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர் இருவருக்கும் கடுமையான போட்டி என வகுப்பில் பேச்சுக்கள்.

என்னுடன் ஒன்றாவது முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து ஒன்பதாம் வகுப்பிலும் அதே வகுப்பில் சேர்ந்த எனது கிராமத்தை சேர்ந்த செல்வம் உன்னால் முடியும் என்றான்.

ஆனால் அந்த மாணவர்களின் வகுப்பறை விடைகளும், வீட்டுப்பாடநேர்த்திகளும் என் நம்பிக்கையை கொஞ்சம் சிதைத்திருந்தது. மிகச்சிறந்தவர்கள்.

திரு லுக்மன் ஹக்கீம் சார் அறிவியல் மாதிரி தேர்வு வைத்தார். அதில் எனக்கே முதல் மதிப்பெண் வழங்கி ஹீரோ பேனா திருநாகலிங்க பாண்டியன் தான் வாங்குவான் என வகுப்பறையில் சொன்னதுதான் எனது நம்பிக்கையின் தொடக்கம்.

படிக்க ஆரம்பித்ததே அன்றிலிருந்துதான். காலாண்டு தேர்வு முடிந்து தமிழ்,அறிவியல்,ஆங்கிலம்,வரலாறு புவியியல் விடைத்தாள் வழங்கப்பட்டது. அந்த மாணவியைவிட ஏழு மதிப்பெண் பின்தங்கி இருந்தேன்.

கணக்கு விடைத்தாளே முதல் மதிப்பெண் யார் ? என தீர்மானிக்கும். வகுப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

எப்பவுமே பேசாத அந்த மாணவி என்னிடம் கணக்கு பரீட்சை எப்படி எழுதியிருக்க என்று கேட்டது.பரவாயில்லாம என்றேன். நீ என்றேன் சுமார் என பதில் வந்தது.

கண்டிலான் ராமர் பொம்பள பிள்ளைங்க பொய் சொல்லும் நீ நம்பாத, அந்த மாணவிய எட்டாவது வரை யாரும் முந்துனது இல்ல என்றான்.

கணக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது.
அந்த மாணவி 47 நான் 86 மதிப்பெண்.

எனது விடைத்தாளை வாங்கி சென்ற அந்த மாணவி பக்கம் பக்கமாக சரிபார்த்து கொண்டிருந்தது சுவாரஸ்யம்.

திரு லுக்மன் ஹக்கீம் சார் அன்று ஹீரோ பேனா எனக்கு வழங்கி என்னை ஊக்குவித்து எனது இன்றைய நிலைக்கு காரணம் மட்டுமல்ல எனது ஹீரோவும் அவரே.

எனது வாழ்க்கை விளக்கை
தூண்டிய ஒரு ஜோதி
திரு லுக்மன் ஹக்கிம் சார் அவர்களை இந்த ஆசிரியர் தினத்தில் வணங்குகிறேன்

பா திருநாகலிங்க பாண்டியன்
M.Sc (Nursing) D.Pharm.,

Tutor in Nursing
மதுரை மருத்துவ கல்லூரி , மதுரை .

News

Read Previous

ஆசிரியர்களே ஆதிப்பாடம் போதியுங்கள்

Read Next

தமிழர் பரம்பரை

Leave a Reply

Your email address will not be published.