பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

Vinkmag ad

 

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.

1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
4. அதற்கு என்ன செலவாகும்?
இதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூபாய் 744/- மட்டுமே
செலவாகும். புரோக்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செலவாகும்.
5. PAN CARD – ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)
3) ரூ.50,000/-க்கு மேல் வங்கியில் Fixed Deposit செய்யும் போது அவசியம்.
4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000 தாண்டும் போது அவசியம்.
5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணையங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6) வங்கி கணக்கு துவங்கும் போது.
7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.
8) தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.
9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.
10) வருமான வரி ரிட்டன தாக்கல் செய்ய அவசியம்.
11) சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற Pan Cardகட்டயமாகும்.
12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.
மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.
இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினைக்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வருகின்றனர்.
“மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது.
மேலும், இந்தக் கார்டை வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரி செலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

பான்கார்டு பெற விரும்புவோர் வருமான வரித்துறையின் Form49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.

இந்த விண்ணப்பப் படிவத்தை http://www.utitsl.co.in/pan (or) www.tin-nsdl.com (or)www.incometaxindia.gov.in, ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம். அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Status அறிய
இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.
விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. பள்ளி டிசி
1. மின் கட்டண ரசீது
2. பிளஸ் டூ சான்றிதழ்
2. தொலைபேசி கட்டண ரசீது
3. கல்லூரி் சான்றிதழ்
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. வாட்டர் பில்
5. பாஸ்போர்ட்
6. ரேசன் கார்டு
6. ரேசன் கார்டு
7. வீட்டு வரி ரசீது
7. வாக்காளர் அடையாள அட்டை
8. பாஸ்போர்ட்
8. வீட்டு வரி ரசீது
9. வாக்காளர் அட்டை
9. ஓட்டுனர் உரிமம்
10. ஓட்டுனர் உரிமம்
10.பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்றஇணையத்தளத்தை நாடலாம்.
சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக்கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.
C – Company
P – Person
H – HUF(Hindu Undivided Family)
F – Firm
A – Association of Persons (AOP)
T – AOP (Trust)
B – Body of Individuals (BOI)
L – Local Authority
J  – Artificial Juridical Person
G – Government
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.
மத்திய வருமான வரித்துறை அலுவலகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட் கார்டை பெற வேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதேபோல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்

நன்றியுடன்
P.இராஜா

PAN Card
Permanent Account Number

PAN card is one of the most essential documents issued by the Income Tax Department of India, that contains a PAN number.

This is a ten digit alphanumeric number that is unique to every individual.

In addition, it contains other vital information like your photograph, name, address etc. Now days it is rather compulsory for one to have a PAN, be it a resident or a non-resident Indian.

The Income Tax Department of India has issued the PAN card in order to track the financial transaction of every person.

This is necessary to simplify the process of imposing tax. It is mandatory to quote your PAN number in every financial transaction.

 Advantages of PAN Card

Ø  PAN number acts as an Identity proof.  The PAN is unique, national, and permanent.

Ø  It is unaffected by a change of address, even between states.

Ø  PAN card is almost mandatory for financial transactions such as

v  Opening a bank account.

v  Issue of Credit Card.

v  Receiving taxable salary or professional fees.

v  Sale or purchase of assets above specified limits.  Like :

§  Buying or selling a car.

§  Buying or selling immovable property.

v  It has to be quoted while buying a mobile phone or getting a land line connection.

v  It is necessary for any travel related expense exceeding Rs. 25,000./-.

v  If you deposit an amount exceeding Rs. 50000.00 in bank or post office, the PAN number has to be quoted.

Ø  If you are NRI, even then you will need your PAN card in order to carry out any of the above transactions in India and also to run a business.

 Permanent Account Number (PAN) Card

What does the PAN card contain?

The PAN card states all of your basic information on it including:

Ø  PAN – a unique ten-digit alphanumeric number

Ø  Name – Name of the PAN holder

Ø  Date of Birth – Date of birth of the PAN holder

Ø  Father name – Father’s name of the PAN holder

Ø  Photograph – the photograph of the PAN holder

Ø  Signature – The signature of the PAN holder

In case of a company pan card It includes the India tax number, name of the company and the date of your company formation or incorporation.

 Requirements for PAN Card:

Ø  Two passport size colour photos.

Ø  Photo ID Proof (Passport copy, election card, driving license etc.)

Ø  Address Proof, if the current address is different from the one in the photo id proof.

Ø  Bank statement.

Ø  If the applicant is not having any photo id proof or the address proof then he has to submit an affidavit attested by the Govt. gazzitted officer.

How to apply for a PAN?

Download PAN application (Form 49A) from

 (www.incometaxindia.gov.inwww.utiisl.co.in or tin.nsdl.comor  photocopied (on A4 size 70 GSM paper) or obtained from any other source. The form is also available at IT PAN Service centers and TIN Facilitation centers.

Fill the form and submit with the required documents to the nearest TIN Center.

For more Information for Andhra Pradesh, Please contact:m040-24731627, Surabhi Arcade, Bank Street, Koti, Hyderabad. A.P.

News

Read Previous

ரேஷன் கடையில் “ஸ்டாக் தீந்து போச்சு”ன்னு சொல்றாங்களா?

Read Next

அண்ணல் காந்தியார் பற்றிய எண்ணிமக் கள்ஞ்சியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *