மருத்துவ காப்பீடு திட்டம்

Vinkmag ad

அன்பான சகோதர சகோதரிகளே நாம் வாழும் இந்த நாட்டில் அரசு பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது…இந்த திட்டங்களில் பல மக்களை சென்றடைவதில்லை மற்றும் பெரும்பாலும் பயன் தருவதில்லை..

ஆனால் மத்திய மாநில அரசின் மருத்துவ காப்பீடு என்ற திட்டம் சாமானிய மக்களுக்கு முழுமையான வகையில் பயன் தரக்கூடியதாக உள்ளது …

நாம் வாழும் இந்த நாட்டில் நமக்கோ அல்லது நமது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு ஏதேனும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் போது இந்த காப்பீடு திட்ட அட்டையை பயன்படுத்தி ஆண்டுக்கு 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம்…

மருத்துவ காப்பீடு திட்டம் என்றால் என்ன?

கலைஞர் காப்பீடு திட்டம் என்பதை தற்போது தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் என அழைக்கப்படுகிறது…

இந்த திட்டத்தில் பழைய காப்பீடு தொகையை
ரூ.2 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது …

ஆனால் தற்போது மத்திய அரசின் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டமும் இணைந்து வருடத்திற்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக காப்பீடு தொகையின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது…

சில நபர்கள் கலைஞரின் ஆட்சி காலத்தில் காப்பீடு திட்ட அட்டை வாங்கி இருப்பார்கள்…

சில நபர்கள் தற்போது வாங்கி இருப்பார்கள்…

இதில் எந்த அட்டையை வாங்கி இருந்தாலும் தற்போது அனைத்து அட்டைகளும் செல்லும்…

மேலும் மத்திய அரசும், மாநில அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளதால் மத்திய அரசுக்கு என தனியாக எந்த காப்பீடு திட்ட அட்டையும் தேவையில்லை மாநில அரசின் திட்ட அட்டை போதுமானது…

மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெறுவது எப்படி?

1. குடும்ப அட்டை

2. நம் பகுதி V.A.Oவிடம் வாங்கிய வருமான வரி சான்றிதழ்
(குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளது என சான்றிதழை வாங்க வேண்டும்..)

3.குடும்ப அட்டையின் நகலை வருமானவரி சான்றுகளுடன் இணைத்து உங்களது ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீடு திட்டத்திற்கான தனியே ஒரு துறை உள்ளது இங்கே சென்றால், உங்களது சான்றிதழ்களை சரிபார்த்து,

உங்களை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு, 22 இலக்க எண்களை உங்களுக்கு உடனே கொடுத்துவிடுவார்கள்..

இந்த 22 இலக்க எண்களை வாங்கிய அடுத்த நாளே நமக்கு சிகிச்சை தேவை ஏற்பட்டாலும்,

இந்த 22இலக்க எண்களை மருத்துவமனையில் கூறி சிகிச்சையை தாராளமாக பெற்றுக்கொள்ளலாம்…

குடும்பத் தலைவர் புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதுமானது…குடும்ப அட்டையில் உள்ள மற்ற அனைவரும் பயனடைவார்கள்….

வெளிமாநிலத்தவர்கள் மற்றும் இலங்கை அகதிகள்

மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து ஆறு மாதத்திற்க்கு அதிகமாக தங்கி இருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையிலிருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம்.

இத்திட்டத்தில், முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள், முகாம்களில் தங்கி இருப்பதற்க்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்று இல்லாமல் சேரலாம்.

காப்பீடு திட்ட அட்டை செயல்பாட்டில் உள்ளதா?

உங்களது காப்பீடு திட்ட அட்டை செயல்பாட்டில் உள்ளதா இல்லையா என அறிந்துகொள்ள,

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீட்டு திட்ட துறையில் 22 இலக்க எண்களை கூறி சரி பார்த்துக் கொள்ளலாம்..

இந்த காப்பீடு திட்டம் மூலம் நம் பகுதியில் எந்தெந்த மருத்துவமனைகளில் பயன்பெற முடியும்?

இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது.

அரசு & தனியார் மருத்துவமனையும் சேர்த்து மொத்தம் 1000+ மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த திட்டம் அமலில் உள்ளது

WWW. CMCHISTN.COM இந்த வலைதளத்திற்கு சென்றால் நம் பகுதியில் உள்ள மருத்துவ காப்பீடு திட்ட மருத்துவமனைகளின் பெயர்,விலாசம்,
தொடர்பு எண்கள்,நமக்கான காப்பீடு தொகை எவ்வளவு? தொலைந்துபோன காப்பீடு திட்ட அட்டை பதிவிறக்கம் என சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் எளிமையாக உள்ளது…

மேலும் சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் வலைத்தளத்தில் இணைக்கபட்டுள்ளது.

உதவி மையம்

இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

நமக்கு தேவையான அனைத்து சந்தேங்களையும் இந்த எண்ணிற்கு கால் செய்தால் நிவர்த்தி செய்யப்படும்..

இதயநோய், டையலஸிஸ்,ENT ,என பல அறுவை சிகிச்சைகள் இந்த திட்டத்தில் செய்துகொள்ளலாம்

கூடுதல் தகவல்கள் பெற…

தமிழக அரசின் இணையதளம்:

https://www.cmchistn.com

திட்டங்களை பற்றிய தகவல் பெற (ஆங்கிலத்தில்)

https://www.cmchistn.com/instructions.pdf

தகுதிகள்:

https://www.cmchistn.com/eligibility_ta.php

மருத்துவ சிகிச்சைகளும் அரசின் சார்பில் வழங்கப்படும் மருத்துவ உதவியும்

https://www.cmchistn.com/prate.php

News

Read Previous

சரித்திரமாக மாறிய சாதனை பிறவிகள்

Read Next

அறிவியலின் பின் அணிவகுப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *