நலமாக வாழ்ந்திடு…. நாட்டினைக் காத்திடு..!
>>>>>>>>>நலமாக வாழ்ந்திடு..
நாட்டினைக் காத்திடு..!<<<<<<<<<<<
சிந்தனை செய்திடு சிகரத்தை தொட்டிடு !
செல்வத்தைப் பெற்றிடு செருக்கினை விட்டிடு !
சந்தண மனமிடு சரித்திர புகழெடு !
சாதனை தொடர்ந்திடு சகலமும் வைத்திடு !
சந்ததி வளர்த்திடு சமத்துவம் போற்றிடு !
சத்தியம் காத்திடு சாயாமல் நின்றிடு !
இந்தியன் என்றிடு இதயத்தில் வைத்திடு !
இல்லாமை மாற்றிடு இலக்கைநீ எட்டிடு !
ஒற்றுமை விதைத்திடு உன்பணி செய்திடு !
ஓடிநீ உழைத்திடு ஊருக்குள் உயர்ந்திடு!
ஊற்றாக உதவிடு உழைப்பாலே செலவிடு !
ஊரோடு சூழ்ந்திடு உணர்வுக்கு வித்திடு !
வேற்றுமை களைந்திடு வேதனை போக்கிடு !
வேர்வையை சிந்திடு விளைச்சலை கண்டிடு !
நாற்றாக வளர்ந்திடு நற்கனி தந்திடு !
நலமாக வாழ்ந்திடு நாட்டினைக் காத்திடு !
-கண்ணன்சேகர்.
***********இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்**************
Tags: நலம்