நவீன உலகம்

திருச்சி யு .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com    கொலை மிரட்டல் விடுக்கும் தொலைப்பேசிகள்! காம வலை வீசும் அலைப்பேசிகள்!  வதந்திகளைப் பரப்பும் தந்திகள் ! பீதிகளைப் பரப்பும் செய்திப்பத்திரிக்கைகள்!      கைரேகையிலிருந்து மாறி கணிப்பொறியில் ராசி பலன் பார்க்கும் மனிதர்கள் !  முற்காலத்தில் பெண்கள் காட்சிப் பொருளாய் வைக்கப்பட்டிருந்தர்களாம் அழகிப் போட்டியில் அனைவரையும் வென்ற மிஸ் வேர்ல்டு சொன்னார்!  ஆபாசக் காட்சிகளை வழங்கும் தொலைக்காட்சி […]

Read More

நெய்யாக உருகாதோ நெஞ்சம்… .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)

நெய்யாக உருகாதோ நெஞ்சம்…  வாள்முனையில் கொன்றொழிக்க வந்தவனே நடுநடுங்க ஆள்வீரம் காட்டுபவர் அல்லாஹ்வின் திருப்பெயரால்.…….1.   கல்சுமப்பார், மண்சுமப்பார், கடுந்துயரம் பொறுத்திடுவார் அல்லாஹ்வின் புகழிசைப்பார் அனைவருக்கும் நலமுரைப்பார்………2   சிந்தனையை மதித்திடுவார் செல்வத்தை மதித்தறியார் எந்தநிலை என்றாலும் இறைநினைவை இழந்தறியார்………….3   நல்லெண்ணம் கொள்வதற்கே நாயன்அவன் முதற்தகுதி உள்ளவனென்(று) உணர்த்துபவர் உலகிரண்டின் நாயகமே!…………………..…4   புகழ்கொண்ட சிகரத்தில் போயிருக்கும் வேளையிலும் ”புகழெல்லாம் அல்லாஹ்வின் புகழ்”என்பார் புனிதரிவர்………………..…….5   செங்குருதி சிந்திடினும் சிரத்தில்அடி பட்டிடினும் வெங்கொடுமை இணைவைப்பை வீழ்த்திடுவார் […]

Read More

சுனாமி

என் மனம் கனத்திருந்தால் உன் மடி தேடி வருவேன் அமைதியாய் ஆர்ப்பரிக்கும் அலை தொட்டு வரும் ஈரக்காற்று – என் இடர் தீர்க்குமென்று! உன் நீலக்கூந்தல் வாசம் கொள்ள – நீளுமொரு கூட்டம் அங்கே கண்டிருக்கிறேன் அந்தோ….. ஓலங்கள் ………மரண ஓலங்கள் உன்னை சபித்துக்கொண்டிரும் மனித உள்ளங்கள் புரியாத பெயர் சொல்லி -விளையாடும் உன் விளையாட்டின் விலை  – ஒன்றுமறியா அப்பாவிகளின் உயிரோ? அசுரமாய் ஆர்ப்பரித்த  அலையால் – உன் கொடூர வலையால் – உன் மடியெங்கும் எங்கள் மனித உயிர்கள் என் மனம் கனத்திருக்கிறது……….…….! புதுசுரபி 

Read More

எல்லாம் பழகிபோச்சு !

(பி. எம். கமால், கடையநல்லூர்) இருட்டும் திருட்டும் விரட்டும் விலைவாசியும் புரட்டும் பொய்யும் பொல்லாக் கொலைகளும் எல்லாம் இப்போது எங்களுக்குப் பழகிப் போச்சு ! நாங்கள் வாக்குறுதிகளை நம்பியே வாழ்க்கையை  இழந்தவர்கள் ! இலவசங்களுக்காக வாக்குரிமைக்  கற்பை ஆள்காட்டி விரல் அடையாள மையில் காணா க்கி  விட்டோம் ! ஆட்டு மந்தைகளாய் ஆகிவிட்ட எங்களுக்கு தலைகளைவிடத் தலைவர்கள் ஏராளம் ! ஜனநாயகத்தில் தலைகள்தான் எண்ணப்படும் ! ஆனால் எங்கள் நாட்டில் தறுதலைகள் எண்ணப்படுகின்றன ! ராமன்களுக்கு படையல்களா கப் பள்ளிவாசல் சிதறல்கள் ! அபிஷேகம் நடப்பதோ முசல்மான் குருதியில் ! குரங்குகள் […]

Read More

கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)

அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம் அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே ! முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம் முடங்கிக் கிடக்கிறது  ஞானப் பெண்ணே ! கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு கண் அவன் உனக்கு ஞானப் பெண்ணே ! சீரியலைப் பார்க்காதே ஞானப் பெண்ணே-உன்னைச் சீரழித்து விடுமது ஞானப் பெண்ணே ! திருமறையைத்  தினம்  ஓது  ஞானப்பெண்ணே-உன்னைத் திருத்தி வழி காட்டிவிடும் ஞானப் பெண்ணே ! கண் பசுவைக் கண்டபடி ஞானப் பெண்ணே !-நீ கட்டவிழ்த்து விடவேண்டாம் ஞானப் பெண்ணே ! மண் போலப் பொறுமை கொண்ட ஞானப் பெண்ணே !-நீ மன்னிக்கப் […]

Read More

முதுமை

  (பி.எம். கமால், கடையநல்லூர்) முதுமை- இள “மை”  வற்றிய எழுதுகோல் ! காலம் மென்று துப்பிய குப்பை ! வாழ்க்கைத் தொழுகையின் “அத்தஹயாத்” இருப்பு ! அன்று- குடும்பத் தேர்தலின் தலைமைத் தேர்தல் அதிகாரி ! இன்று- வீட்டுத் தேர்தலில் செல்லாத ஓட்டு ! முதுமை- இயலாமை புகுந்த இருட்டு வீடு ! நரைதான் அங்கே நூலாம்படையோ ? முதுமை- வாழ்க்கை ஒளியில் சிறகிழந்த ஈசல் ! மழை நின்ற பிறகு கிளை விடும் தூவானம் […]

Read More

பர்தாப் போடுதல் சரிதான்!

வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து ..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான் வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற …வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்  மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள் …மேய்ந்திட்ட மேனிமீதுக் காமப் பார்வைப் பெய்தவிடம் தாக்காமல் பாது காக்கப் …பெருங்கேட யம்போலாம் பர்தாப் போர்வை!          கண்ணியத்தைப் போற்றுகின்ற பெண்கள் கற்பைக் …காத்துநிற்கும் பர்தாவை வேணடாம் என்றால் பெண்ணியத்தைப் பேசுகின்ற பெண்கள் நீங்கள் …பெண்ணுக்கு ஏதேனும் பாது காப்பை மண்ணுலகில் தந்துவிட்டுப் பேச […]

Read More

எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு..

                          எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு.. இருப்பினும் காமிரா மனிதர்களே எம் நெற்றிக்கண் திறக்கிறார்கள்.! கண்முன் நடந்தாலும் எதையும் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் ஊர் பற்றி எரியும் போது கூடவே நாங்களும் அழுவோம்.! நீதிக்கான எங்கள் கோபங்களுக்கும் ஆத்திரங்களுக்கும் காலக்கெடு உண்டு.! அவை புஸ்வாணமாகிப் போகும் ஊர் அடங்கிய பின்னே! சினிமாக்கள் எங்களின் சிறைச்சாலைகள். தொலைக்காட்சிகள் எங்கள் சவப்பெட்டிகள். […]

Read More

கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)

1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை இது .இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத இக்கவிதை  தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் -( பி எம் கமால் , கடையநல்லூர் ) கடவுளே பதில்சொல்வாய் ! (கவிக்கோ அப்துல்ரகுமான்) எங்கள் சரித்திரத்தின் இருண்ட !காலமது ஏகத்துவச் சுடர் எண்ணெய் இன்றி இருட்டுப் போரில் இளைத்துக் கொண் !டிருந்தது கிரகண நோயில் கிரணங்கள் […]

Read More

ஹைக்கூப் போட்டி !

ஹைக்கூப் போட்டி ! பரிசு ரூபாய் 5000/- இறுதி நாள் 10-12-2012 தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி ! கவிஞர்கள் தங்களின் சிறந்த ஹைக்கூவிலிருந்து இயற்கை சார்ந்த  3 ஹைக்கூ கவிதைகளை அனுப்பி வைக்கலாம். முழு முகவரி, கைபேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும். கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ இலக்கணத்திற்குட்பட்டு இருக்க வேண்டியது அவசியம். இறுதி நாள் :- 10-12-2012 அனுப்ப வேண்டிய முகவரி:- கவிஞர் சுடர் முருகையா பி3/ பிளாக் 59, ஜீவன் […]

Read More